எவன் கார்ட் தலைவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு-

avant gardeநேற்றுமாலை கைது செய்யப்பட்ட எவன் கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் கப்பலின் உக்ரைன் நாட்டு தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலி நீதவான் நீதிமன்றில் அஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெவ்ரிலே ஜெனட் என்ற உக்ரைன் நாட்டுப் பிரஜை குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று மாலை காலி துறைமுகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். எவன் கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் கப்பல் சம்பந்தமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

பால்லபான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு-

accidentகண்டி – கொழும்பு பிரதான வீதியின் பால்லபான பகுதியில் நேற்று இடம்பெற்ற பாரிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. குறித்த விபத்துச் சம்பவத்தில் முன்னதாக நேற்றைய தினம் மூவர் உயிரிழந்ததோடு, கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரும் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த 12 பேர் நேற்று கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன. வேன் ஒன்றும் தனியார் பஸ்ஸ{ம் மோதியதில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காயமடைந்த ரோஹித மற்றும் சிரியாணி வைத்தியசாலையில் அனுமதி-

hospitalஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்த்தன மற்றும் சிரியாணி விஜேவிக்ரம ஆகியோர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் வட் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே இவர்கள் காயமடைந்துள்ளனர். கொழும்பு கோட்டை பகுதியில் பொலிஸ் தடைகளை தள்ளிக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் முன்னால் செல்வதற்கு முற்பட்ட வேளையில் பொலிஸ் தடுப்பு வேலி அவர்கள்மீது விழுந்ததில் காயம் ஏற்பட்டுடதாக ரோஹித்த அபேகுணவர்த்தனவின் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டுள்ள இவ்வார்ப்பாட்டம், உலக வர்த்தக மையத்துக்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறைப் பகுதியில் 201.8 ஏக்கர் காணி கையளிப்பு-

vali north landயாழ். காங்கேசன்துறை ரயில் நிலையம் உள்ளிட்ட 201.8 ஏக்கர் பரப்பளவிலான நிலம், பொதுமக்களிடம் நாளை கையளிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, குறித்த நிலத்தை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.

இந்நிகழ்வில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா, யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். விபத்தில் படுகாயமடைந்த மாணவன் உயிரிழப்பு-

accidentயாழ். காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து, யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், தாவடி காளி கோவிலடியைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது17) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். சைக்கிளில்; பாடசாலைக்குச் சென்ற மாணவனை வேகமாக வந்த பட்டா வாகனம் மோதித்தள்ளியது. இதில் மாணவன் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பு கூறியுள்ளது.