விமான நிலைய தாக்குதல் விசாரணை ஜுலை 29இல்-

gfgfகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பிலான வழக்கு 15 வருடங்களின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா தெரிவித்தார். புலிகளால் இந்தத் தாக்குதல் 2001ஆம் ஆண்டு ஜூலை 24இல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில், இரத்தினசிங்க புஷ்பகுமரன் அல்லது பொன்னுத்துரை, நிர்மல ரஞ்சன் அல்லது மசூர், விக்டர் அல்பிறட் டொமினிக், சுப்பிரமணியம் நவராஜசிங்கம், நாகேந்திரம் நகரத்தினம், தனபாலசிங்கம் ஜெயலக்ஷ்மி ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி தொடக்கம் 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 வரையான காலப்பகுதியில், விமான நிலைய தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக அவர்களுக்கு எதிராக 311 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஏழு விமானப்படை வீரர்களை கொன்றதாகவும் 14 படையினரை காயப்படுத்தியதாகவும் இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது இரண்டு கிபிர் விமானங்கள், ஒரு மிக் விமானம், மூன்று மு-8 விமானம், இரண்டு ஆ1-17 ஹெலிகள் ஆகியன அழிக்கப்பட்டன. மேலும், எட்டு பெல் ஹெலிகள், 4 மிக் விமானங்கள், 6 கிபிர் விமானங்கள், 03 மிக் யுத்த விமானங்கள், 3குவு விமானங்கள் என்பவற்றுக்குச் சேதம் ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டப்படுள்ளது. இந்த வழக்கில், துப்பாக்கிகள் இரண்டு, ஆர்.பி.ஜிகள் இலக்கு வைத்துச் சுடும் ஒரு துப்பாக்கி உட்பட 244 சான்றுப் பொருட்களாக காட்டப்பட்டதுடன், 415 பேர் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

‘பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது’-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்-

sadadaபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்படி தாமதிப்பது ஸ்திரமின்மையை நீடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா என்பது குறித்து பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில், அதிலிருந்து விலகுவது என்று முடிவெடுக்கப்பட்ட பின்னர், அந்த முடிவு குறித்து ஆராய்ந்த ஐரோப்பிய தலைவர்களே இவ்வாறு கூறியுள்ளனர். தமது ஒன்றியத்தின் ஏனைய 27 நாடுகளும் அப்படியே தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சூலஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் மற்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டி ஆகியோருடன் நெருக்கடிநிலை பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவு குறித்து தாம் வருத்தமடைந்தாலும், பிரிட்டன் மக்களின் முடிவை மதிப்பதாக கூறியுள்ளனர். பிரிட்டன் மக்களின் முடிவை அமுல்படுத்துவதை பிரிட்டன் முடிந்தவரை விரைவாக செய்ய வேண்டும் என்று கூறிய அவர்கள், அது மிகவும் வேதனையான நடவடிக்கை என்றும் கூறியுள்ளனர். எந்தவொரு தாமதமும், தேவையற்ற ஸ்திரமின்மையை நீடிக்கச் செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்-

287beacb-feda-4556-80e3-11ca57695d6b-720x480திருகோணமலையின் சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணியில் இருந்து 11 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘சம்மந்தன் ஐயாவே! சம்பூருக்கு தீர்வென்ன, சோற்றையும் தந்து நஞ்சையும் தருவதா, நிலக்கரி மின் நிலையம் மக்களின் வாழ்வுக்கு நாசம், வளமான சம்பூரை சுடுகாடு ஆக்காதே, நிலக்கரி தூசால் மக்களை கொல்லாதே, நல்லாட்சி அரசே மக்களுக்கு பதில் சொல்லு’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர். சம்பூர் அனல் மின்நிலையத்தினால் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன, மத வேறுபாடு இன்றி ஒட்டுமொத்த இலங்கைக்கே ஆபத்து. இதனால் இதனைத் தடுத்து நிறுத்த அரசியல்வாதிகளும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு-

201606251227000881_Boris-Johnson-UKs-next-prime-minister_SECVPFஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து இங்கிலாந்தில் நேற்று முன்தினம் பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவளித்து 52 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

அதை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கி லாந்து விலகுவது உறுதியாகி விட்டது. இதனால் பிரதமர் கேமரூன் பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். ஒக்டோபர் மாதத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.அதை தொடர்ந்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த பிரதமராக லண்டன் நகர் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வவுனியா வாள்வெட்டில் நான்கு பேர் படுகாயம்-

25-6-2016 12.6.0 5 (2)வவுனியா வைரவபுளியங்குளம் புகையிரத நிலையவீதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி திருத்தும் நிலையத்தில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்தில் வேலையில் இருந்த நான்கு பேரை சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு முச்சக்கரவண்டியினை அதே இடத்தில் நிறுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார். மேலும் முச்சக்கர வண்டியை வவுனியா பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.