அரசுடன் உத்தியோகபூர்வ பேச்சை ஆரம்பிக்க வலியுறுத்து, எண்மர் கொண்ட குழுவும் கூட்டமைப்பால் நியமனம்-

ssssssssssநீண்­ட­கா­ல­மாக காணப்­படும் தேசிய இனப்பிரச்சி­னைக்கு தீர்வு உட்­பட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணும் முக­மாக தேசிய அர­சாங்­கத்­துடன் விரைவில் உத்­தி­யோ­க­பூர்வ பேச்சுவார்த்தையொன்றை ஆரம்­பிக்க வேண்டுமென தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்­பட்­டுள்­ளது. அதனையடுத்து இவ்­வி­ட­யங்­களை கையாண்டு உரிய நட­வ­டிக்­கை­களை முன்னெ­டுப்­ப­தற்­காக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்­சி­களின் சார்பில் தலா இருவர் வீதம் எண்­ம­ரடங்­கிய குழு­வொன்றும் நியமிக்கப்­பட்­டுள்­ளது.

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவரும் எதிர்க்­கட்­சித்­ த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் எம்.பி, இலங்கை தமிரசுக்கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா எம்.பி, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அதன் தலைவர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன், அதன் செய­லாளர் சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி, ரெலோ சார்பில் அதன் தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தி­த­லை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி, அதன் மூத்த உறுப்பினரான ஸ்ரீகாந்தா, புளொட் சார்பில் அதன் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி, அதன் மத்­திய குழு உறுப்­பினர் ஆர்.ராகவன் ஆகி­யோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்டம் கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று சனிக்­கி­ழமை காலை 10மணி முதல் பிற்­பகல் ஒரு மணி­வ­ரையில் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் நடைபெற்றது. இக்­கூட்­டத்தில் பங்­கா­ளிக்­கட்­சி­களைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, சுரேஸ்­பி­ரே­மச்­சந்­திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம்(ஜனா) , ஹென்றி மகேந்திரன், ஸ்ரீகாந்தா, தருமலிங்கம் சித்தார்த்தன், சிவநேசன்(பவன்), ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். (நன்றி -ஆர்.ராம்- வீரகேசரி (26.06.2016)