பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அவசர இடமாற்றம்-

policeபொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 3 பேர், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நுவன் வேதிசிங்க, சிலாபத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை, சிலாபத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சந்தன அத்துகோரல, கல்கிஸைக்கு மாற்றப்பட்டுள்ளார். கல்கிஸையில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜனக குலதிலக, அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். கொழும்பு தெற்கு பொலிஸ் அத்தியட்சகராக இருந்த நிஷாந்த சொய்ஸா, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உதவி பொலிஸ் அத்தியடசகராக கடமையாற்றிய ஆர்.எல்.ரன்தெனிய, கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம்-

sdfdfdfசித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் பொதுசபையின் யோசனைக்கு அமைவாக இன்றைய தினம் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, “சித்திரவதைக்கு உள்ளானவர்களின் உரிமையை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு 22 வருடங்கள் ஆகிவிட்டது” என மத்திய மாகாண மனித உரிமைகள் அலுவலகம் தெரிவிக்கின்றது. கடந்த 10 வருடங்களில் இதனுடன் தொடர்புடைய புதிய சட்டங்கள் உருவாக்கப்படவில்லை எனவும் அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். குறித்த அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட வேலைத்திட்டத்தின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரிட்டனுக்கான ஆணையாளர் பதவி விலகல்-

dfdfdfffஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக தீர்மானித்ததையடுத்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் எதிர்வரும் ஒக்டோபரில் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனுக்கான ஆணையாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோனதன் ஹில் நேற்று அறிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தனது பணியை முறையாக மேற்கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கையில்லை என அவர் கூறியுள்ளார்.