வலிவடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேற அனுமதி-

sfdfdfdயாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து நேற்று விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியமர இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளிக்கப்பட்டன. காங்கேசன்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணிவழங்கும் நிகழ்வில் வைத்து குறித்த காணிகளை பாதுகாப்பு செயலாளர் கையளித்தார். எனினும் குறித்த காணிகளை பார்வையிடுவதற்கு நேற்றையதினம் பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியிருக்கவில்லை. எனினும், இன்றையதினம் பாதுகாப்பு வேலிகள் அகற்றப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமது காணிகளை தமது கிராம சேவையாளரிடம் பதிவுகளை மேற்கொண்ட மக்கள், விடுவிக்கப்பட்ட ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கட்டுவன் ஜே-242, குரும்பசிட்டி ஜே-238, ஆகிய பகுதிகளில் 126.3 ஏக்கர் காணி, வறுத்தலைவிளான் ஜே-241 பகுதியில் 12 ஏக்கர் காணி, வடக்கு புகையிரதசேவையின் இறுதிப்பகுதியான காங்கேசன்துறையில் 63 ஏக்கர் காணி உள்ளடங்கலாக 201.3 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய தரை பராமரிப்பு பொறுப்புகள் மாற்றம்-

airportகட்டுநாயக்க விமான நிலையத்தின் தரை பராமரிப்பு பொறுப்புகளை இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திடம் (யுiசிழசவ ரூ யுஎயைவழைn ளுநசஎiஉநள (ளுசi டுயமெய) டுiஅவைநன) பகிர்ந்து கொள்ள, பொருளாதார விவகாரங்களுக்கான உப குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது இந்த நடவடிக்கைகள் சிறீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிறீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் பங்குதாரராக தனியார் நிறுவனம் ஒன்றை இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்தது. எனினும் தரை பராமரிப்பு பொறுப்புகளை அரசாங்கம் தன்னகத்தே வைத்திருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2010 சிவில் விமான சேவைகள் சட்டத்தின்படி விமான நிலையத்தின் தரை பராமரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கத்தின் 51 வீதத்துக்கும் அதிக பங்கை பெற்றுக்கொள்ளும் நிறுவனத்துக்கே வழங்கப்படும். இதன்படி அரசாங்கத்தின் இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திடம் குறித்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல சிறார்களுக்கு சுருதி பெட்டி அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

i2எமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்நத பரம்சோதி லோகஞானம் அவர்களால் இன்று இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 8300 பெறுமதியான சுருதிபெட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தார். கடந்த மாதம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிறவியில் ஊனமுற்ற மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயிலும் இனிய வாழ்வு இல்லத்திற்க்கு அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்க சென்றிருந்த போது அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் தமது கல்வி சம்பந்தமான சில தேவைகளை முன் வைத்திருந்தனர்.அவற்றில் பலவற்றை நாம் வழங்கியிருந்தபோதும் சுருதிப்பெட்டி வழங்கபடாது இருந்தது. இவ் இல்லத்தி உள்ள கண்பார்வையற்ற மாணவர்கள் தாம் சங்கிதம் பயில்வதற்கு தம்மிடம் இருந்த ஒரு சுருதிப்பெட்டியும் பழுதடைந்து விட்டது இதனால் தாம் சிரமங்களை மேற்கொள்வதாக எம்மிடம் தெரிவித்ததிற்க்கு அமைவாக பரஞ்சோதி லோகஞானம் அவர்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைவர் கு.பகீரதன் ஊடாக இன்று அவர்களது இல்லத்தில் வைத்து சங்கீதம் பயிலுவதற்க்கு தேவையான இவ் உபகரணம் கையளிக்கபட்டுள்ளது. தானத்தில் சிறந்த தானம் கல்வித்தானம் எனும் வாக்குக்கு அமைவாக இவ் கைங்கரியத்தை செய்ய முன்வந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்களுக்கு இல்ல சிறார்கள் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரின் சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவத்துக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

i2 i3