அமரர் விக்டர் அலோசியஸ் மரியதாஸ் அவர்களின் இறுதி நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)
கடந்த 25.06.2016 அன்று பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் அகால மரணமான அமரர் விக்டர் அலோசியஸ் மரியதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் நேற்று 29.06.2016 யாழ். கந்தரோடை சுன்னாகத்தில் இடம்பெற்றது. அன்னாரின் பூதவுடல் புனித அந்தோனியார் வீதி, கந்தரோடை சுன்னாகம் என்ற முகவரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நேற்று அன்னாரின் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகளும், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து முற்பகல் 11 மணியளவில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டு விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அங்கிருந்து கொட்டியாவத்தை சேமக்காலைப் பகுதிக்கு 12.30அளவில் அன்னாரின் பூதவுடல் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டபோது அங்கு பொலிஸாரின் மரியாதைகள் மற்றும் அணிவகுப்புகள் இடம்பெற்றன. தொடர்ந்து கொட்டியாவத்தை சேமக்காலையிலும் பொலிஸாரின் மரியாதை நிகழ்வுகள் இடம்பெற்று பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வுகளில் புளொட் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், வை.பாலச்சந்திரன், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ஜி.ரி.லிங்கநாதன், தவநாதன், முன்னாள் வலிதெற்கு பிரதேசசபைத் தலைவர் பிரகாஸ், முன்னாள் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் மற்றும் அரசாங்க அதிகாரிகள், ஆசிரிய, ஆசிரியர்கள் அரசியல் பிரமுகர்கள், அமரர் விக்டர் அலோசியஸ் மரியதாஸ் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர்மக்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.