கறுப்பு ஜுலையில் வீரமக்கள் தின அழைப்பு-

veeramதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கழகக் கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நெஞ்சில் நிறுத்தி கறுப்பு ஜூலையில் 27ம் வீரமக்கள் தினம் நடைபெறவுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) மற்றும் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியக் கிளையினரால் லண்டன் ஈஸ்ட்காம் நகர மண்டபத்தில் இந்த நினைவஞ்சலி நிகழ்வினை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. எதிர்வரும் ஜூலை 17ம் திகதி ஞாயிறுக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறும் மேற்படி அஞ்சலி நிகழ்வில், அனைத்து இயக்கங்களின் முன்னைநாள் போராளிகள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளதுடன், கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. “ஒன்றாய் இன்றும் நாமில்லையேல் விடுதலை என்றும் நமக்கில்லை” என்ற வாசகத்தை முன்நிறுத்தி மறைந்த அனைத்து இயக்க போராளிகளையும் வணங்கி நினைவு கூரும் இந்த முன்மாதிரி அஞ்சலி நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.