யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு சார்புறுப்புக்கள அன்பளிப்பு (படங்கள் இணைப்பு)
திருமதி. நாகரஞ்சினி ஜங்கரன் அவர்களின் ஏற்பாட்டில் யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக அனுப்பிவைக்கப்பட்ட ஒரு தொகுதி சார்புறுப்புக்கள் மற்றும் உபகரணங்களை கௌரவ பா.ம.உறுப்பினரும் த.ம.வி.கழகத் தலைவருமான திரு.த. சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று கையளித்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து நிறுவனத்தின் முகாமைத்துவ குழுவின் சார்பாக நன்றிக் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதுடன் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர். அது தொடர்பான மேலதிக விபரங்களை கீழ் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பார்க்கவும்.