சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தையொட்டி பேரணிகள்-

qwewசர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தையொட்டி இன்று நாடளாவிய ரீதியில் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி இன்றுகாலை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் இடம்பெற்றது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்த இப்பேரணி ஆணைக்குழுவின் மாவட்ட இணைப்பாளர் ஏ சீ ஏ அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது. கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திற்கு முன்னால் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி வழியாக வந்து கல்லடி பாலத்தின் அருகில் நிறைவடைந்தது. இதேவேளை ´சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி´ எனும் தொனிப்பொருளிலான பேரணி இன்று யாழ். நகரில் முன்னெடுக்கப்பட்டது. இப்பேரணி கன்னியம்மடம் வீதி வழியாக வேம்படி சந்தி ஊடாக யாழ். மணிக்கூடு வீதியை வந்தடைந்தது. அங்கிருந்து, யாழ்.பொலிஸ் நிலையத்தினை கடந்து, யாழ். ஆஸ்பத்திரிவீதி வழியாக காங்கேசன்துறை வீதியை சென்றடைந்து அங்கிருந்து, முற்றவெளியில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் சித்திரவதையினை ஓழிப்போம் என்ற வாசகங்கள் பொறித்த சுலோகங்களை தாங்கியவாறு மதத்தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொலிஸார், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

தலைக்கவசமின்றி சென்ற இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு-

accident (12)மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு – கொழும்பு பிராதான வீதியில் ஜயந்தியாய எனும் இடத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று இளைஞர்கள் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஜயந்தியாய ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் இரண்டு பேர் பாடசாலை மாணவர்களாவர். ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி பயிலும் கரீம் கஸ்மீர் (வயது15), ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தரம் 11ல் கல்வி பயிலும் சனூஸ் இம்தாத் (வயது16), நிஸ்தார் இஸ்பாக் (வயது19) என்ற மூன்று பேர் மரணமடைந்துள்ளதுடன், புஹாரி சியாம் (வயது26) என்பவர் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் தலைக்கவசம் அணியாமையும் அதிக வேகமுமே இம் மரணத்திற்கான காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

நாமல் ராஜபக்சமீது வழக்குத் தாக்கல், ஜோன்ஸ்டனுக்கு பிணை-

namal (2)இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக அந்த ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விசாரணை ஒன்றிக்கு வாக்குமூலம் பெறுவதற்காக வருகை தருமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர் அதனை புறக்கணித்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சதொச ஊழியர்களை அரசியல் வேலைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்ணாந்தோ மற்றும் செயற்பாட்டு பணிப்பாளர் மொஹமட் சாபிரு ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 05 வழக்குகளில் ஒரு வழக்கிற்காக, 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 50 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மல்லாவியிலும் மாணவிமீது துஷ்பிரயோகம்-

abuse (5)முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை, அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 04 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து மூலம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஊடாக அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதிபர் இந்த விடயத்தை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து, வலயக் கல்விப் பணிமனையால் புதன்கிழமை (29) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆசிரியரை பாடசாலை வளாகத்தில் இயங்குகின்ற கோட்டக்கல்வி அலுவலகத்தில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் யாழ்ப்பாணத்தின் இரண்டு பாடசாலைகளில் மாணவிகள், அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த நிலையில், தற்போது, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முறிகண்டி விபத்தில் 4 பேர் காயம்-

accidentமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற இரு வேறு வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஒருவரும் லொறி சாரதியும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த விபத்து இடம்பெற்ற இடத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த நபர்மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது. விபத்தில் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்ட நபரும் மோட்டார் சைக்கிள் சாரதியும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

23 உள்ளூராட்சி மன்றங்களின் காலவரையறை நிறைவு-

sri lanka23 உள்ளூரராட்சி மன்றங்களின் கால வரையறை இன்றுடன் நிறைவடைகின்றது. கடந்த காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நீடிக்கப்பட்டிருந்ததாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றுடன் உள்ளுராட்சி மன்றங்களின் காலம் நிறைவடைகின்றது. இதேவேளை இன்று முதல் நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக கமல் பத்மசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்-

dsfdfபிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். சிறிகொத்தவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சியின் உறுப்புரிமையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார். சரத் பொன்சேகாவுடன், அவரது ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை இந்நிகழ்வின்போது இனிமேல் எனது அரசியல் தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் இனிமேல் ஜனநாயக கட்சியின் தலைவர் அல்ல என்றும், எனினும் அந்தக் கட்சி கலைக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். 2020ம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் நோக்கில் தான் ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்டதாகவும், மேலும் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது அழைப்பை ஏற்று பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டதாக அக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கூறினார். ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்ட ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொறுப்புக்கள் வழங்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.