Header image alt text

பாலியல் துஷ்பிரயோகங்களைக் கண்டித்து சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்-

sdfsdfsயாழ். தென்மராட்சி வரணி பிரதேசத்திலுள்ள கல்லூரி ஒன்றில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கும் சாவகச்சேரியிலுள்ள தேசியப் பாடசாலை ஒன்றின் மாணவன் தாக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, நீதி கிடைக்கக் கோரி தென்மராட்சி பிரதேச வாழ் மக்களால் சாவகச்சேரியில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. கவனயீர்ப்புப் போராட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டிருந்தவர்கள் ‘அவதானம்! அவதானம்! பிரத்தியேக வகுப்புத் தொடர்பில் அவதானம், ‘அச்சுறுத்தாதே! அச்சுறுத்தாதே! சிறுவர் உரிமைகளைக் தட்டிக்கேட்கும் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தாதே!,’ ‘வேலியே பயிரை மேய்வதா?’, ‘கைதுசெய்! கைதுசெய்! காவாலி ஆசிரியர்களைக் கைதுசெய்! அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பு,’ ‘சிதைக்காதே! சிதைக்காதே! மலரும் மொட்டுக்களைச் சிதைக்காதே!’ போன்ற வாசகங்களைத் தாங்கிச் சென்றனர். Read more

தமிழ் அகதிகள் 36பேர் நாளை இலங்கை வருகை-

refugeஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய ஒருங்கிணைப்புடன் நாளை 36 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி வெளிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, குறித்த அகதிகள் சென்னையிலிருந்து மிஹின்லங்கா விமானசேவை ஊடாக மு.ப. 11.45 மணியளவில் வருகைதர உள்ளனர். இதற்கமைய அவர்களது பயணப்பொதியின் அளவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ் அகதிகள் 36 பேரில் 20 ஆண்களும் 16 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு மீள்குடியமர்வதற்காக வருகை தருகின்றனர். Read more

வலிவடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேற அனுமதி-

sfdfdfdயாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து நேற்று விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியமர இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளிக்கப்பட்டன. காங்கேசன்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணிவழங்கும் நிகழ்வில் வைத்து குறித்த காணிகளை பாதுகாப்பு செயலாளர் கையளித்தார். எனினும் குறித்த காணிகளை பார்வையிடுவதற்கு நேற்றையதினம் பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியிருக்கவில்லை. எனினும், இன்றையதினம் பாதுகாப்பு வேலிகள் அகற்றப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமது காணிகளை தமது கிராம சேவையாளரிடம் பதிவுகளை மேற்கொண்ட மக்கள், விடுவிக்கப்பட்ட ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கட்டுவன் ஜே-242, குரும்பசிட்டி ஜே-238, ஆகிய பகுதிகளில் 126.3 ஏக்கர் காணி, வறுத்தலைவிளான் ஜே-241 பகுதியில் 12 ஏக்கர் காணி, வடக்கு புகையிரதசேவையின் இறுதிப்பகுதியான காங்கேசன்துறையில் 63 ஏக்கர் காணி உள்ளடங்கலாக 201.3 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய தரை பராமரிப்பு பொறுப்புகள் மாற்றம்-

airportகட்டுநாயக்க விமான நிலையத்தின் தரை பராமரிப்பு பொறுப்புகளை இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திடம் (யுiசிழசவ ரூ யுஎயைவழைn ளுநசஎiஉநள (ளுசi டுயமெய) டுiஅவைநன) பகிர்ந்து கொள்ள, பொருளாதார விவகாரங்களுக்கான உப குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது இந்த நடவடிக்கைகள் சிறீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிறீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் பங்குதாரராக தனியார் நிறுவனம் ஒன்றை இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்தது. எனினும் தரை பராமரிப்பு பொறுப்புகளை அரசாங்கம் தன்னகத்தே வைத்திருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2010 சிவில் விமான சேவைகள் சட்டத்தின்படி விமான நிலையத்தின் தரை பராமரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கத்தின் 51 வீதத்துக்கும் அதிக பங்கை பெற்றுக்கொள்ளும் நிறுவனத்துக்கே வழங்கப்படும். இதன்படி அரசாங்கத்தின் இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திடம் குறித்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல சிறார்களுக்கு சுருதி பெட்டி அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

i2எமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்நத பரம்சோதி லோகஞானம் அவர்களால் இன்று இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 8300 பெறுமதியான சுருதிபெட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தார். கடந்த மாதம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிறவியில் ஊனமுற்ற மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயிலும் இனிய வாழ்வு இல்லத்திற்க்கு அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்க சென்றிருந்த போது அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் தமது கல்வி சம்பந்தமான சில தேவைகளை முன் வைத்திருந்தனர். Read more

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அவசர இடமாற்றம்-

policeபொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 3 பேர், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நுவன் வேதிசிங்க, சிலாபத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை, சிலாபத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சந்தன அத்துகோரல, கல்கிஸைக்கு மாற்றப்பட்டுள்ளார். கல்கிஸையில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜனக குலதிலக, அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். கொழும்பு தெற்கு பொலிஸ் அத்தியட்சகராக இருந்த நிஷாந்த சொய்ஸா, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உதவி பொலிஸ் அத்தியடசகராக கடமையாற்றிய ஆர்.எல்.ரன்தெனிய, கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம்-

sdfdfdfசித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் பொதுசபையின் யோசனைக்கு அமைவாக இன்றைய தினம் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, “சித்திரவதைக்கு உள்ளானவர்களின் உரிமையை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு 22 வருடங்கள் ஆகிவிட்டது” என மத்திய மாகாண மனித உரிமைகள் அலுவலகம் தெரிவிக்கின்றது. கடந்த 10 வருடங்களில் இதனுடன் தொடர்புடைய புதிய சட்டங்கள் உருவாக்கப்படவில்லை எனவும் அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். குறித்த அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட வேலைத்திட்டத்தின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரிட்டனுக்கான ஆணையாளர் பதவி விலகல்-

dfdfdfffஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக தீர்மானித்ததையடுத்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் எதிர்வரும் ஒக்டோபரில் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனுக்கான ஆணையாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோனதன் ஹில் நேற்று அறிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தனது பணியை முறையாக மேற்கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கையில்லை என அவர் கூறியுள்ளார்.

அரசுடன் உத்தியோகபூர்வ பேச்சை ஆரம்பிக்க வலியுறுத்து, எண்மர் கொண்ட குழுவும் கூட்டமைப்பால் நியமனம்-

ssssssssssநீண்­ட­கா­ல­மாக காணப்­படும் தேசிய இனப்பிரச்சி­னைக்கு தீர்வு உட்­பட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணும் முக­மாக தேசிய அர­சாங்­கத்­துடன் விரைவில் உத்­தி­யோ­க­பூர்வ பேச்சுவார்த்தையொன்றை ஆரம்­பிக்க வேண்டுமென தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்­பட்­டுள்­ளது. அதனையடுத்து இவ்­வி­ட­யங்­களை கையாண்டு உரிய நட­வ­டிக்­கை­களை முன்னெ­டுப்­ப­தற்­காக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்­சி­களின் சார்பில் தலா இருவர் வீதம் எண்­ம­ரடங்­கிய குழு­வொன்றும் நியமிக்கப்­பட்­டுள்­ளது.

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவரும் எதிர்க்­கட்­சித்­ த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் எம்.பி, இலங்கை தமிரசுக்கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா எம்.பி, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அதன் தலைவர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன், அதன் செய­லாளர் சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி, ரெலோ சார்பில் அதன் தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தி­த­லை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி, அதன் மூத்த உறுப்பினரான ஸ்ரீகாந்தா, புளொட் சார்பில் அதன் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி, அதன் மத்­திய குழு உறுப்­பினர் ஆர்.ராகவன் ஆகி­யோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read more

மரண அறிவித்தல்-

Posted by plotenewseditor on 25 June 2016
Posted in செய்திகள் 

மரண அறிவித்தல்-திரு. விக்டர் அலோசியஸ் மரியதாஸ் அவர்கள்

alosiusயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் வவுனியாவை வாழ்விடங்களாகவும் கொண்ட திரு. விக்டர் அலோசியஸ் மரியதாஸ் அவர்கள் இன்று (25.06.2016) சனிக்கிழமை பூநகரியில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகால மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

ploteஎமது கட்சித் தலைவரின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தரான இவர் எமது கட்சி உறுப்பினர்கள் அனைவருடனும் மிகுந்த அன்புடனும் நெருக்கமாகவும் பழகி வந்தவர். அன்னாரது இழப்பை புளொட் அமைப்பினராகிய நாம் சொல்லொணாத் துயர் சுமந்து ஆறாத் துயரோடு, அஞ்சலித்து எம்தேசத்து நேச நெஞ்சங்களுக்கும் அறியத்தருகின்றோம்.

வலி வடக்கில் 201.3 ஏக்கர் காணிகள் விடுவிப்பு-

erwtrயாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொதுமக்களின் 201.3 ஏக்கர் காணிகள், இன்று விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுநர், முப்படைகளின் தளபதிகள், யாழ் அரச அதிபர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், விடுவிக்கப்படும் காணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். Read more

விமான நிலைய தாக்குதல் விசாரணை ஜுலை 29இல்-

gfgfகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பிலான வழக்கு 15 வருடங்களின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா தெரிவித்தார். புலிகளால் இந்தத் தாக்குதல் 2001ஆம் ஆண்டு ஜூலை 24இல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில், இரத்தினசிங்க புஷ்பகுமரன் அல்லது பொன்னுத்துரை, நிர்மல ரஞ்சன் அல்லது மசூர், விக்டர் அல்பிறட் டொமினிக், சுப்பிரமணியம் நவராஜசிங்கம், நாகேந்திரம் நகரத்தினம், தனபாலசிங்கம் ஜெயலக்ஷ்மி ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி தொடக்கம் 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 வரையான காலப்பகுதியில், விமான நிலைய தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக அவர்களுக்கு எதிராக 311 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஏழு விமானப்படை வீரர்களை கொன்றதாகவும் 14 படையினரை காயப்படுத்தியதாகவும் இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது இரண்டு கிபிர் விமானங்கள், ஒரு மிக் விமானம், மூன்று மு-8 விமானம், இரண்டு ஆ1-17 ஹெலிகள் ஆகியன அழிக்கப்பட்டன. மேலும், எட்டு பெல் ஹெலிகள், 4 மிக் விமானங்கள், 6 கிபிர் விமானங்கள், 03 மிக் யுத்த விமானங்கள், 3குவு விமானங்கள் என்பவற்றுக்குச் சேதம் ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டப்படுள்ளது. இந்த வழக்கில், துப்பாக்கிகள் இரண்டு, ஆர்.பி.ஜிகள் இலக்கு வைத்துச் சுடும் ஒரு துப்பாக்கி உட்பட 244 சான்றுப் பொருட்களாக காட்டப்பட்டதுடன், 415 பேர் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

‘பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது’-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்-

sadadaபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்படி தாமதிப்பது ஸ்திரமின்மையை நீடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா என்பது குறித்து பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில், அதிலிருந்து விலகுவது என்று முடிவெடுக்கப்பட்ட பின்னர், அந்த முடிவு குறித்து ஆராய்ந்த ஐரோப்பிய தலைவர்களே இவ்வாறு கூறியுள்ளனர். தமது ஒன்றியத்தின் ஏனைய 27 நாடுகளும் அப்படியே தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சூலஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் மற்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டி ஆகியோருடன் நெருக்கடிநிலை பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவு குறித்து தாம் வருத்தமடைந்தாலும், பிரிட்டன் மக்களின் முடிவை மதிப்பதாக கூறியுள்ளனர். பிரிட்டன் மக்களின் முடிவை அமுல்படுத்துவதை பிரிட்டன் முடிந்தவரை விரைவாக செய்ய வேண்டும் என்று கூறிய அவர்கள், அது மிகவும் வேதனையான நடவடிக்கை என்றும் கூறியுள்ளனர். எந்தவொரு தாமதமும், தேவையற்ற ஸ்திரமின்மையை நீடிக்கச் செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்-

287beacb-feda-4556-80e3-11ca57695d6b-720x480திருகோணமலையின் சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணியில் இருந்து 11 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘சம்மந்தன் ஐயாவே! சம்பூருக்கு தீர்வென்ன, சோற்றையும் தந்து நஞ்சையும் தருவதா, நிலக்கரி மின் நிலையம் மக்களின் வாழ்வுக்கு நாசம், வளமான சம்பூரை சுடுகாடு ஆக்காதே, நிலக்கரி தூசால் மக்களை கொல்லாதே, நல்லாட்சி அரசே மக்களுக்கு பதில் சொல்லு’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர். சம்பூர் அனல் மின்நிலையத்தினால் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன, மத வேறுபாடு இன்றி ஒட்டுமொத்த இலங்கைக்கே ஆபத்து. இதனால் இதனைத் தடுத்து நிறுத்த அரசியல்வாதிகளும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு-

201606251227000881_Boris-Johnson-UKs-next-prime-minister_SECVPFஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து இங்கிலாந்தில் நேற்று முன்தினம் பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவளித்து 52 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

அதை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கி லாந்து விலகுவது உறுதியாகி விட்டது. இதனால் பிரதமர் கேமரூன் பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். ஒக்டோபர் மாதத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.அதை தொடர்ந்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த பிரதமராக லண்டன் நகர் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வவுனியா வாள்வெட்டில் நான்கு பேர் படுகாயம்-

25-6-2016 12.6.0 5 (2)வவுனியா வைரவபுளியங்குளம் புகையிரத நிலையவீதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி திருத்தும் நிலையத்தில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்தில் வேலையில் இருந்த நான்கு பேரை சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு முச்சக்கரவண்டியினை அதே இடத்தில் நிறுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார். மேலும் முச்சக்கர வண்டியை வவுனியா பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

எவன் கார்ட் தலைவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு-

avant gardeநேற்றுமாலை கைது செய்யப்பட்ட எவன் கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் கப்பலின் உக்ரைன் நாட்டு தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலி நீதவான் நீதிமன்றில் அஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெவ்ரிலே ஜெனட் என்ற உக்ரைன் நாட்டுப் பிரஜை குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று மாலை காலி துறைமுகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். எவன் கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் கப்பல் சம்பந்தமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

பால்லபான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு-

accidentகண்டி – கொழும்பு பிரதான வீதியின் பால்லபான பகுதியில் நேற்று இடம்பெற்ற பாரிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. குறித்த விபத்துச் சம்பவத்தில் முன்னதாக நேற்றைய தினம் மூவர் உயிரிழந்ததோடு, கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரும் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த 12 பேர் நேற்று கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன. வேன் ஒன்றும் தனியார் பஸ்ஸ{ம் மோதியதில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காயமடைந்த ரோஹித மற்றும் சிரியாணி வைத்தியசாலையில் அனுமதி-

hospitalஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்த்தன மற்றும் சிரியாணி விஜேவிக்ரம ஆகியோர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் வட் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே இவர்கள் காயமடைந்துள்ளனர். கொழும்பு கோட்டை பகுதியில் பொலிஸ் தடைகளை தள்ளிக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் முன்னால் செல்வதற்கு முற்பட்ட வேளையில் பொலிஸ் தடுப்பு வேலி அவர்கள்மீது விழுந்ததில் காயம் ஏற்பட்டுடதாக ரோஹித்த அபேகுணவர்த்தனவின் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டுள்ள இவ்வார்ப்பாட்டம், உலக வர்த்தக மையத்துக்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறைப் பகுதியில் 201.8 ஏக்கர் காணி கையளிப்பு-

vali north landயாழ். காங்கேசன்துறை ரயில் நிலையம் உள்ளிட்ட 201.8 ஏக்கர் பரப்பளவிலான நிலம், பொதுமக்களிடம் நாளை கையளிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, குறித்த நிலத்தை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.

இந்நிகழ்வில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா, யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். விபத்தில் படுகாயமடைந்த மாணவன் உயிரிழப்பு-

accidentயாழ். காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து, யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், தாவடி காளி கோவிலடியைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது17) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். சைக்கிளில்; பாடசாலைக்குச் சென்ற மாணவனை வேகமாக வந்த பட்டா வாகனம் மோதித்தள்ளியது. இதில் மாணவன் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பு கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது பிரித்தானியா-

dfdfஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறியும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. “பிரெக்ஸிட்´ என அழைக்கப்படும் அந்த விலகல் குறித்த பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக, இதுவரை இல்லாத அளவு 4.65 கோடி வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொது வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பொது வாக்கெடுப்பின்போது பெய்த மழையையும் பொருள்படுத்தாது லட்சக்கணக்கானோர் வாக்களித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. Read more