கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழக தீபாவளி துடுப்பாட்ட போட்டி-முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆரம்பித்து வைப்பு(படங்கள் இணைப்பு)-
வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் தீபாவளி தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று(03.07.2016) பிற்பகல் 2மணியளவில் கோவில்குளம் இந்துக் கல்லூரி மைதானத்தில், கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகத் தலைவர் திரு க.பார்த்தீபன் தலைமையில் வெகு சிறப்பாக ஆரம்பமானது. இவ் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்ப போட்டியினை தொடக்கி வைத்தார். ஆரம்ப போட்டியில் அல்-மதினா மற்றும் என்.சி.சி. விளையாட்டு கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இவ் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் திரு கா.பார்த்தீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகம் மற்றும் கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக் கழகம் என்பவற்றின் முன்னாள் தலைவர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.