சங்குவேலி விநாயகர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016-(படங்கள் இணைப்பு)-
யாழ். உடுவில் சங்குவேலி விநாயகர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நேற்று முன்தினம் 02.07.2016) சனிக்கிழமை முன்பள்ளியின் போசகர் திரு. திருமுருகன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக முன்னாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதையடுத்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.