தமிழ் தேசிய இளைஞர் கழக அனுசரணையில் கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)-
வவுனியா கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (05.07.2016) முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்திருந்தார். நிகழ்வின் கௌரவ அதிதிகளாக வ.முருகனூர் சாரதா வித்தியாலய அதிபர் திரு பி.நேசராஜா, வ.கோவில்குளம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை பிரதி அதிபர் திருமதி ஓங்காரநாதன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். சிறப்பு அதிதிகளாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.சந்திரிக்கா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் திரு முத்தையா கண்ணதாசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்தியகுழு இளைஞரணி செயற்பாட்டாளர் திரு சு.காண்டீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) பின்லாந்து இணைப்பாளர் சந்துரு மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் திரு த.நிகேதன், அமைப்பாளர் திரு வ.பிரதீபன் , பிற முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள், வினோத உடை நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் வ.கோவில்குளம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை பிரதி அதிபர் திருமதி ஓங்காரநாதன் அவர்களினாலும் ஒரு தொகுதி பரிசுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.