உறவுகளை நினைத்து உணர்வுடன் 27வது வீர மக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பம்.! (படங்கள் இணைப்பு)

zபுளொட் அமைப்பின் 27வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று 13.06.2016 காலை வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நினைவில்லத்தில் உள்ள கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த அதிதிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்களதும், கழகத்தின் மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களதும் உருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவித்தனர். அத்துடன் நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இறைபணிச் செம்மல் செ.வை.தேவராசா(கண்ணகி), சுத்தானந்த இந்து இளைஞர் மன்றத் தலைவர் திரு நா.சேனாதிராசா, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு கு.ரவீந்திரநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு வை.பாலச்சந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு த.யோகராஜா, மற்றும் செயற்குழு உறுப்பினர்களான திரு. குகதாசன், திரு சு.காண்டீபன், மாவட்ட செயற்குழு நிதி பொறுப்பாளர் நிசாந்தன், மாவட்ட குழு உறுப்பினர்களான ஆட்டோ சங்கத் தலைவர் ரவி, மூர்த்தி ஆகியோருடன் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

IMG_3175 IMG_3186 IMG_3187 IMG_3188 IMG_3190 IMG_3191 IMG_3192 IMG_3193 IMG_3194 IMG_3195 IMG_3196 IMG_3198 IMG_3199 IMG_3203 IMG_3207 IMG_3208 IMG_3213 IMG_3214 IMG_3217 IMG_3218 IMG_3220 IMG_3222 IMG_3223 IMG_3226 IMG_3229 IMG_3230 - Copy IMG_3234 IMG_3279