சுவிஸில் 10 யூலை 2016 நடைபெற்ற வீரமக்கள் தினம் (படங்கள் இணைப்பு)
புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் கடந்த 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 14.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில், கழகதோழர்கள், ஆதரவாளர்கள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் பிரதிநிதிகள் ஆகியோருடன் பெரியோர்கள், குழந்தைகளென பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக, மங்கள விளக்கை தோழர்கள் மனோ, சித்தா, கைலாசநாதன் (குழந்தை), ஜெர்மன் கிளைத் தோழர் யூட், திருமதி.சுகந்தினி இரதீஸ்வரன் (தீபன்), திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், திரு.இரத்தினகுமார் ஆகியோர் ஏற்றிவைக்க, இதனைத் தொடர்ந்து மரணித்த அனைத்து அமைப்புக்களின் தலைவர்கள், போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் மலரஞ்சலி செய்யப்பட்டது.தொடர்ந்து, தோழர் ரஞ்சன் அவர்களின் தலைமையில் மௌன அஞ்சலியுடன் விழா ஆரம்பித்து வைக்கப்பட, விழாவினை திருமதி. ஜெயவாணி குகராஜாசர்மா அவர்கள் மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
விழாவில் வினோத உடைப் போட்டி, நடன, நாட்டிய நிகழ்வுகள், சிறு பிள்ளைகளின் ‘தாளலயம்’, சிறுவர் பாட்டு, விருந்தினர்கள் உரை, நன்றியுரை, ஆகியவற்றுடன் தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சைப் போட்டியில் வெற்றியீட்டிய மற்றும் பங்குபற்றிய, அனைத்து மாணவ, மாணவிகளுக்குமான பரிசில்கள் வழங்குதலும் நடைபெற்றது.
விருந்தினர்கள் உரையில் திரு.விவேகானந்தன் ஆசிரியர், திரு.செல்வராஜா ஆசிரியர், திரு.சிவஞான பண்டிதர் மகேந்திரன், சுவிஸ் சூரிச் தமிழர் கலாசார மன்றம் சார்பாக திரு. இரத்தினகுமார், ஈழ மக்கள் புரடசிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி) சார்பாக தோழர் சுதாகரன், ‘புளொட்’ அமைப்பின் சார்பாக தோழர் ரஞ்சன் ஆகியோர் உரையாற்றி இருந்தனர்.
நன்றியுரையினை தோழர் சிவா வழங்கி இருந்தார். ‘நடன நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவிகளுக்கும் அவர்களை நெறியாள்கை செய்து வழங்கியதுடன் நிகழ்வையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய நடன ஆசிரியை திருமதி ஜெயவாணி குகராஜாசர்மா அவர்கட்கும், ‘தாளலயம்’ உட்பட சிறுவர் சங்கீதப் பாடல்கள், கதைக்கதம்பம் போன்ற நிகழ்வுகளை தயாரித்து வழங்கிய ஆசிரியை திருமதி. வதனாம்பாள் புஷ்பானந்தசர்மா அவர்கட்கும் மற்றும் இன்றைய நிகழ்வுக்கு பல வழிகளிலும் உதவிபுரிந்த திருமதி. கருணாகரன் தவச்செல்வி, திருமதி. சந்திரா அரிராஜசிங்கம், திருமதி. வர்ணகுமாரன் நேசராணி, திரு.ஜெகநாதன், மற்றும் ஒலியமைப்பை சிறப்புடன் வழங்கி இருந்த திரு.குமார் மற்றும் அவரது நண்பருக்கும்;, மண்டப அலங்காரத்தை செய்து உதவிய திரு.நவம் அவர்களுக்கும், மற்றும் உதவிகள் புரிந்த அனைவருக்கும்;.. கழக சுவிஸ்கிளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்தார்.
நன்றி அறிவித்தலைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மேற்படி பரிசில்களை வயதில் மூத்தோர், விருந்தினர்கள், உதவிகள் புரிந்தோர், கழகதோழர்கள் ஆகியோரினால் நிகழ்வுகளை தந்தோர்கள், உதவிகள் புரிந்தோருக்கான பரிசில்களும், மாணவ மாணவிகளுக்குமான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்ததது.
(படங்களின் மேல் கிளிக் செய்தால் பெரிதாகப் பார்க்கமுடியும்)
மேலும் படங்கள் இணைக்கப்படும்