வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இருதய சத்திர சிகிச்சைக்கான நிதி அன்பளிப்பு-
நேற்று (12.07.2016) செவ்வாய்க்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக யாழ். உடுவிலைச் சேர்ந்த பரமனாதன் இராணி என்பவரின் இருதய சத்திர சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த துஸ்சியந்தன் அவர்களால் 25,000 ரூபாவும் லண்டன் நாட்டை சேர்ந்த லோகஞானம் அவர்களால் 10,000 ரூபாவும் சுழிபுரத்தை சேர்ந்த பாலா என்பவரினால் 5,000 ரூபாவுமாக சத்திர சிகிச்சைக்காக ரூபா 40,000 வங்கியில் வைப்பிலிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கி வைக்கபட்டுள்ளது. மேற்படி விண்ணப்பமானது அவரது மகள் ப.ரேகா என்பவரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடந்த 24.06.2016 அன்று முன்வைக்கபட்டது. அவர் தெரிவிக்கையில் 1990ம் ஆண்டு தாங்கள் தையிட்டி காங்கேசன்துறை மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து உடுவில் தெற்கு புதுமடம் மானிப்பாயில் வசிக்கின்றோம். 2 பெண் பிள்ளைகளை சுமையாக தாங்கி வயதான தந்தையுடன் வாழ்கின்றோம். தற்போது எனது தாயாருக்கு இதயத்தில் 4அடைப்புகள் இருப்பது கண்டுபடிக்கபட்டுள்ளது. நாங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை கூட பூர்த்திசெய்ய முடியாத வறுமைக்கோட்டின் கிழ் வாழ்ந்து வருகின்றோம். லங்கா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு ரூபா 800,000 தேவையாக உள்ளது. எங்களின் பெயரில் உள்ள காணியையும் நகைகளையும் அடகுவைத்து அவரின் வைத்திய சிகிச்சைக்காக பணம் சேர்த்துள்ளபோதும் போதுமானதாக இல்லை. எனவே தங்களிடமும் இவ் உதவியை வேண்டி நிற்கின்றோம் என கூறியுள்ளார். இவ் மனிதநேய மருத்துவ உதவியை செய்ய முன்வந்த கருணை உள்ளங்களான துஸ்சியந்தன்(அவுஸ்திரேலியா) லோகஞானம்(லண்டன்) மற்றும் பாலா(சுழிபுரம்) ஆகியோருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கோள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).