மக்களை நேசித்து மரணத்தை தழுவிக்கொண்ட முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் வசந்தன் அவர்களுக்கு அஞ்சலி-(படங்கள் இணைப்பு)-

IMG_333927வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னாள் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமீழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மூத்த உறுப்பினருமான தோழர் ச.சண்முகநாதன்(வசந்தன்) அவர்களுக்கு வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூபியில் மறைந்த 18ஆவது நினைவு தினமான 15.07.2016 அன்று அவர்களை நினைவுகூரும் முகமாக விளக்கேற்றி, மலர்மாலைகள் அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவருடன் மறைந்த அவரது புதல்வர் ச.வக்சலன் அவர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்விலே தோழர் வசந்தனின் அன்புத் தாயார், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு. க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், ஈரோஸ் அமைப்பின் தலைவரும், தோழர் வசந்தனின் சகோதரருமான திரு. ச.துஸ்யந்தன்,ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு.யோகராஜன், பிரபல வர்த்தகர் செந்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர்களான திரு மு.கண்ணதாசன், திரு சு.காண்டீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர் மற்றும் உறவுகளுடன் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

IMG_3328 IMG_3339 IMG_3343 IMG_3348 IMG_3350 IMG_3356 IMG_3362 IMG_3363 IMG_3366 IMG_3370 IMG_3389 IMG_3392 IMG_3394 IMG_3399