வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வலி மேற்கில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் 27 ஆவது வீரமக்கள்; தினம் கடந்த 13.07.2016 அன்று முதல் 16.07.2016 வரையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. வீரமக்கள் தினத்தின் இரண்டாம் நாள் நிகழ்வானது வலி மேற்குப் பிரதேசத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டைக் கிளையினால் பிரதேசத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு நினைவுகூரப்பட்டது. இவ் நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டதுடன் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தார். இவ் நிகழ்வில் கழகத்தின் நோர்வே கிளையின் அமைப்பாளர் திரு.ராஜன், கழகத்தின் வட்டுக்கோட்டை உறுப்பினர் தோழர் சின்னக்குமார் மற்றும் பல தோழர்களும், பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.