ஏழாலை தமிழ் பொதுப்பணிமன்ற தையல்பயிற்சியும், கண்காட்சியும்-
செரண்டிப் சிறுவர் இல்லத்தினரால் ஏழாலை தெற்கு தமிழ்ப் பொதுப்பணிமன்ற சனசமூக நிலையத்தில் நடாத்தப்பட்ட 04ஆவது அணியின் தையல் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கடந்த 15.07.2016 வெள்ளிக்கிழமை அன்று செரண்டிப் இல்லத்தின் தலைவர் திரு. அ.கந்தசாமி அவர்களது தலைமையில் நிலையத்தின் முன்றலில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக முன்னாள் வலி.தெற்கு பிரதேசசபை உறுப்பினர் நா.லட்சுமிகாந்தன், சனசமூக நிலையத் தலைவர் சுஜாதரன், ஏழாலை தெற்கு சிலோன் மிசன் போதகர் மைனசீலன், சூராவத்தை முத்துமாரியம்மன் கோவில் நிர்வாக சபைத்தலைவர் சுயம்புலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் பயிற்சி பெற்ற மாணவியரின் கைப்பணிப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், மாணவியருக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்விலே மாணவியர், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.