பாடசாலை சென்ற மாணவியைக் காணவில்லை-

missingமட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த மாணவியொருவர் பாடசாலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 16வயது மாணவி நேற்று வழமை போன்று பாடசாலைக்கு சென்றுள்ளார். குறித்த மாணவி இதுவரை வீடு வந்து சேரவில்லையென குறித்த மாணவியின் பெற்றார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளளனர். குறித்த மாணவியுடன் கல்வி கற்கும் சக வகுப்பு மாணவிகள் பாடசாலை முடிந்து வீடு வந்து சேர்ந்த போதிலும் மேற்படி மாணவி இதுவரை வீடு வந்து சேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி மாணவி பாடசாலை சீருடையுடன் வீட்டை விட்டு பாடசாலைக்கு செல்வதாக கூறி சென்றபோதிலும் குறித்த மாணவி பாடசாலைக்கு செல்லவில்லையெனவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும் செய்திகளை வாசிக்க……ஆகஸ்ட் 21இல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை-

scholarshipஇந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையினை ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடத்தவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இம் முறை 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,959 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 350,701 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, விண்ணப்பதாரிகளின் பரீட்சை நுழைவுச்சீட்டுக்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு நேற்று (18) தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நுழைவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெறாவிடின் 1911 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் அறிவிக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் அதிபர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

முல்லைத்தீவு மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்-

mullaithivu-fishermen-meeting-720x480 (7)முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்று இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மீன்பிடி திணைக்கள உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதோடு, தீர்வுகளை எட்டுவதற்குரிய ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தென்னிலங்கை மீனவர்களால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.