வவுனியாவில் சுவாமி விபுலானந்தா அடிகளாரின் 69வது சிரார்த்த தின நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-
dsdsசுவாமி விபுலானந்தா அடிகளாரின் 69ஆவது சிரார்த்த தின நிகழ்வு இன்று (1907.2016) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றுள்ளது. வவுனியா தனியார் பேரூந்து தரிப்பிடத்திலுள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் மேற்படி நிகழ்வினை வவுனியா தமிழ்மா மன்றம், நகர வரியிறுப்பாளர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வில் அன்னாரின் சிலையினை நிறுவிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வை. பாலச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்களான  ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன் மற்றும் தமிழ் மாமன்றத் தலைவர் கிருபானந்தகுமார், வைத்தியர் மதுகரன், கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், நகர வரியிறுப்பாளர் சங்கத்தலைவரும் தமிழ் விருட்ச சமூக ஆர்வலருமான சந்திரகுமார்(கண்ணன்) வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, அயல் பாடசாலை அதிபர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்த கொண்டிருந்தனர். 

asdsad erere