முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். சிவசிதம்பரம் அவர்களது 93ஆவது பிறந்ததினம்-(படங்கள் இணைப்பு)-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். சிவசிதம்பரம் அவர்களது 93ஆவது பிறந்ததினம் நேற்று (19.07.2016) கரவெட்டி அபிவிருத்திச் சங்கத் தலைவர் உபாலி பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டு உரையாற்றினார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நினைவுப் பேருரை நிகழத்தினார். பேராசிரியர் சிவலிங்கராஜா, முன்னைநாள் மாவட்ட நீதிபதி விக்னராஜா மற்றும் தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் ஆகியோர் நினைவுரைகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். இதில் பெருந்தொகையான மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள அமரர் சிவசிதம்பரம் அவர்களின் உருவச்சிலைக்கு மாலையிடப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு வந்துதும் நினைவுக்கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றது.