வட்டு. இந்து வாலிபர் சங்கத்தினால் உலருணவுப் பொருட்கள், துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

A2எமது புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் தனது பெற்றோரின் 29வது வருட திருமண நாள் நிறைவை முன்னிட்டு இவ் அன்பளிப்புக்கான 56,300 நிதி அனுசரணையினை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்திற்கு உலருணவுப் பொருட்களும் வள்ளுவபுரம் மாணவி ஒருவருக்கு புதிய துவிச்சக்கர வண்டி மற்றும் பாரதி இல்ல பிள்ளைகளுக்கு சிறப்பு மதிய உணவினையும் வழங்கியுள்ளார்.முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் கோரிக்கைக்கமைய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 10 குடும்பங்களுக்கு தலா 2,000 பெறுமதியான 20,000ரூபா பெறுமதிமிக்க உடையார்கட்டு தெற்கு பொதுநோக்கு மண்டபத்தில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போன்று வள்ளுவபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவியின் விண்ணப்பத்துக்கு அமைய கழுவிப்பூட்டிய 16,300ரூபா பெறுமதியில் ஒர் புதிய துவிச்சக்கர வண்டியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்).

B7B6B4B1A4A2B3