லண்டனில் கறுப்பு ஜூலையில் 27ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-(படங்கள் முழுமையாக இணைப்பு)-
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கழகக் கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நெஞ்சில் நிறுத்தி லண்டனின் New ham Town Hall, Barking Road, Eastham, London, E6 2RP என்ற முகவரியில் அமைந்துள்ள ஈஸ்ட்காம் நகர மண்டபத்தில் 27ஆவது வீரமக்கள் தினம் கடந்த (17.07.2016) ஞாயிறுக்கிழமை மாலை 5.10 மணியளவில் லண்டன் தோழர் நடாமோகன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. நிகழ்வின் தலைமையுரையினை லண்டன் ஈஸ்த்ஹாம் உப நகரபிதா போல் சத்தியநேசன் அவர்கள் நிகழ்த்தினார். “ஒன்றாய் இன்றும் நாமில்லையேல் விடுதலை என்றும் நமக்கில்லை” என்ற வாசகத்தை முன்நிறுத்தி மறைந்த அனைத்து இயக்க போராளிகளையும் வணங்கி “கறுப்பு ஜூலையில்” வீரமக்கள் தின அஞ்சலி நிகழ்வு நினைவுகூரப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச் சுடரினை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ரிம்ஸ் அவர்கள் ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மௌன அஞ்சலி இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இசைநடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஈரோஸ் அமைப்பின் சார்பில் வசந்தி, ஆரம்பகால போராளி சத்தியசீலன், கூட்டணியின் பகீரதன் அமிர்தலிங்கம், ரெலோவின் பாவை அருள்ராஜா, கழகத்தின் சார்பில் தோழர் கேசவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் திவாகர், முஸ்லிம் மக்கள் சார்பில் மதிப்பிற்குரிய லெப்பை ஆகியோர் நினைவுச் சுடரினை ஏற்றிவைத்தார்கள். இதனையடுத்து கலந்துகொண்டிருந்த அனைவராலும் மலர்கள் தூவி, நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் நடனநாட்டிய நிகழ்வுகளில் பங்கேற்ற பிள்ளைகளும் அவற்றை நெறிப்படுத்திய ஆசிரியர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.