வட்டு இந்து வாலிபர் சங்கத்தினுடாக யாழ் இந்துக்கல்லூரி அவுஸ்ரேலியா பழைய மாணவர் சங்கம் கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

B3முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலய மாணவர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் மூன்றாம் கட்டமாக கற்றல் உபகரணங்கள் பாடசாலை சீருடைத்துணிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். துணுக்காய் கல்வியத்திற்குட்பட்ட பாடசாலைகளான புத்துவெட்டுவான் அ.த.க பாடசாலை மாங்குளம் மாகாவித்தியாலயம் பாண்டியன் குளம் மாகாவித்தியாலயம் சிறாட்டிகுளம் அ.த.க பாடசாலை கல்விளான் அ.த.க பாடசாலை மற்றும் உயிலங்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு 125 புத்தக பைகள் 23 மாணவர்களுக்கான சீருடைத்துணிகள் மற்றும் 7 துவிச்சக்கர வண்டிகள் என்பன யாழ் இந்துக்கல்லூரி ஆவுஸ்ரேலியா பழைய மாணவர்கள் சங்கத்தினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.இன் நிகழ்வில் அவுஸ்திரேலியா விக்ரோறி யாழ் இந்து பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதி த.ஆதவன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க அங்கத்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைவர் கு.பகீதரன் தெரிவிக்கையில், கடந்த வருடம் வலம்புரி பத்திரிக்கையில் துணுக்காய் கல்வி வலய மாணவர்கள் கல்வி கற்பதில் எதிர் கொள்ளும் இன்னல்கள் தொடர்பான செய்தி பிரசுரிக்கப்பட்டதை தொடர்ந்து இதனை கவனத்தில் கொண்ட வட்டு இந்து வாலிபர் சங்கம் இவ் வருட முதற் பகுதிகளில் இரு கட்டங்களாக பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் காலணிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் என பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக குறிப்பிட்ட பாடசாலை அதிபர்கள் வட்டு இந்து வாலிபர் சங்;கத்திடம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இதனை யாழ் இந்துக்கல்லூரி அவுஸ்ரேலியா விக்ரோறி பழைய மாணவர்கள் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் சீருடைத்துணிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் என்பன அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் நிலை மாறிச் செல்லும் எங்களுடைய தமிழ் இளைஞர்கள் மத்தியில் அவர்களுக்கு முன் உதராணமாகவும் எதிர்கால இளைஞர் சமூகத்துக்கு சிறந்த எடுத்துகாட்டகவும் இன்று அவுஸ்திரேலியா விக்ரோறி யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் கல்வி சமூகத்தின் தேவை அறிந்து இன்று ஆற்றிய இக் கைங்கரியம் போன்று தாயத்தில் கல்வி பயின்று ஏனைய புலம்பெயர் நாடுகளில் உள்ள பழைய மாணவர்களும் தாயகத்தின் கல்வி பசியை போக்க முன் வர வேண்டும் அழைப்பு விடுத்துள்ளதுடன் வலம்புரி பத்திரிகை போன்று தாயகத்தில் வெளிவரும் நாளிதல்களும் எம் மக்களின் பிரச்சனைகள் அவற்றை தீர்ப்பதற்க்கான பொறிமுறைகள் என்பனவற்றை வெளியுலகுக்கு கொண்டுவர முற்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

b1 (2) B2 B3 b5 b6 b7 B15 B17 B18 B20