நான்கு வெளிநாட்டு தூதுவர்கள் நியமன கடிதங்கள் சமர்ப்பிப்பு-

wrtererஇலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தமது நியமன கடிதங்களை வழங்கியுள்ளனர். மெக்ஸிக்கோ, போர்த்துக்கல், கிரீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல் போன்றே அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தற்போதைய அரசின் கொள்கை என்று ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இலங்கைக்கு வழங்க முடியுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வெளிநாட்டு தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

சங்குப்பிட்டி விபத்தில் இருவர் உயிரிழப்பு-

sfdகிளிநொச்சி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், பொலிஸார் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்றதற்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை எனவும் இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலையாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்ட பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய கதிரவேலு கபில்ராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில், பலத்த காயங்களுக்கு உள்ளாகிய பொலிஸார் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் செய்திகளை வாசிக்க…..பாடசாலைக்கு அருகில் இருந்து மிதிவெடி மீட்பு-

land mineயாழ்ப்பாணம் புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் மிதிவெடியொன்று நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நிலத்தில் ஓரளவு புதையுண்ட நிலையில் காணப்பட்ட இந்த மிதிவெடியை, அவ்வழியே சென்றவர்கள் அவதானித்து பருத்தித்துறை பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இதனையடுத்து, விசேட அதிரடிப் படையினருடன் அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், மிதிவெடியை மீட்டனர். விசேட அதிரடிப் படையினரால் மிதிவெடி செயலிழக்கச் செய்யப்பட்டது

இந்திய விமானப்படை விமானம் நடுவானில் மாயம்-

indian flightசென்னை, தாம்பரத்தில் இருந்து பயணமாகிய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று மாயமாகியுள்ளது. 29பேருடன் அந்தமான் புறப்பட்ட மேற்படி விமானம், நடுவானில் மாயமாகியுள்ளது. இன்று காலை 7.30க்கு புறப்பட்ட விமானம், கடைசியாக 8.12 மணிக்கு ராடார் கருவியில் தெரிந்தது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வங்கக் கடலுக்கு மேலே சென்ற போதே விமானம் மாயமாகியுள்ளது. காணாமல் போன விமானப்படை விமானம் ஏ.என் – 32 வகையை சேர்ந்தது ஆகும். இந்த விமானம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. விமானத்தை தேடும் பணி சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ற்குள் மீள்குடியேற்றங்களை நிறைவுசெய்ய திட்டம்-

resettleஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் வடக்கின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை நிறைவு செய்து யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இடம்பெயர் முகாம்களையும் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இறுதிக் கட்டமாக 31 இடம்பெயர் முகாம்களில் உள்ள 971 குடும்பங்களை இவ்வாறு மீள் குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இராணுவத்தின் உதவியுடன் பளை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பிரதேசதங்களில் 204 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது. முகாம்களை முற்றாக நீக்கிவிட்டு, மீள்குடியேற்றங்களை நிறைவு செய்வது தொடர்பான கால அட்டவணை ஒன்று இல்லாவிடினும், வெகு விரைவில் இந்நடவடிக்கைகளை முழுமைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். வீடொன்றிற்கு ஒரு மில்லியன் ரூபா படி 204 வீடுகள் இவ்வாறு நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் இதற்காக, 971 மில்லியன் ரூபாயினை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கடந்த புதன்கிழமை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் சம்பூர் மக்கள்-

sampurசம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தமது அடிப்படை வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக அகதி முகாம்களில் தஞ்சமடைந்து தம் வாழ்கையை நடத்தி வந்த மக்கள் இறுதிக்கட்டமாக சம்பூரில் விதுர கடற்படையினர் விலகிக்கொண்டதை அடுத்து அங்கிருந்த 237 ஏக்கர் காணிகளில் தத்தம் பகுதிகளில் மீளக்குடியேறி வருகின்றனர். சம்பூரில் மீளக்குடியமர்த்தப்பட்ட போதும், தாம் தொடர்ந்தும் நிர்க்கதியாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக போதிய கழிப்பறை வசதிகள் இல்லாமையால் தாம் மிகவும் அல்லலுறுவதாகவும் தெரிவித்தனர். குடிநீர்க் கிணறுகளை துப்பரவு செய்து கிருமி அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். தற்காலிக கொட்டில்களை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு கிடைக்க வழி ஏற்படுத்தித் தரவேண்டும். இலங்கை மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்படுகின்றன. சம்பூரில் முதல் கட்டமாக குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு இவ்வாறான உதவிகள் கிடைக்கப்பெறுகின்ற போதிலும் 2ஆம் கட்டமாக குடியமர்த்தப்பட்ட தாம், குறித்த விடயத்தில் பெரிதும் புறக்கணிக்கப்படுவதாக கவலை தெரிவித்தனர். இறுதி யுத்தத்தில் தமது உறவுகள், உடமைகளை இழந்து நிர்க்கதியான நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் தமது வாழ்க்கையை மீள்விப்பதற்கு அரசு உதவ வேண்டும் என அந்த மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

யாழ். நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுக்கு புதிய வீடுகள்-

housing schemeயுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில், யாழ்ப்பாணம் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக, அரசாங்கத்தினால் 971 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனால், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு, அங்கிகாரம் கிடைத்துள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள அனைத்து இடம்பெயர்ந்தவர்களையும் மீள்குடியேற்றுவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கவனம் செலுத்தியுள்ளார். அந்தவகையில், உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி, நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான வீட்டுத்திட்டமொன்றை முன்னெடுக்கவும் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில், தற்போது 31 நலன்புரி நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றில், உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளான 971 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்குடும்பங்களில், 641 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது சொந்தக் காணிகளை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர். இதற்கமைய, மேற்படி நலன்புரி முகாம்களிலுள்ள 971 குடும்பங்களுக்குமான 971 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக, 971 மில்லியன் ரூபாயினை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நேற்று தெரிவித்தார். இது தொடர்பில், அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சiவை அங்கிகாரம் வழங்கியுள்ள நிலையில், வீட்டுத் திட்டத்துக்கானப் பணிகள், வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கருணாதிலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.