கீரிமலை இறங்குதுறை அமைக்கும் கடற்படையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு- 
 
M3யாழ். கீரிமலையில் இறங்குதுறையொன்றைக் கட்டுவதற்கான பணிகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அங்கு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சைவசமய பெரியார்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து நடத்தியிருந்தார்கள். கீரிமலை புனித பிரதேசம் மாத்திரமல்லாது கடற்படை அமைக்கின்ற இறங்குதுறையானது மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவே உள்ளது. அத்துடன் இச்சுற்றாடலிலே பல சித்தர்களின் சமாதிகளும் இருக்கின்றன. இறங்குதுறையை அவற்றுக்கு முன்பாக அமைத்தால் அங்கு மீன்பிடி தொழிலுக்கென வருவோர்க்கும் சிரமம். அது ஆலயப் புனிதத் தன்மையையும் கெடுக்கும். அத்தோடு அங்கு மீன்பிடி சமூகமும் இல்லை. மீன்பிடித் தொழிலும் நடைபெறுவதில்லை. இதற்கு முன்பும் மீன்பிடித் தொழில் அப்பகுதியில் நடைபெற்றதில்லை. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத் தலைவர் ஆறுதிருமுகன், கீரிமலை ஆலய குரு ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இறங்குதுறையினை தையிட்டி, மயிலிட்டி பகுதியில் அமைக்க வேண்டியதை விட்டுவிட்டு இங்கு அமைப்பது ஆலயத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் என்பதோடு, கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் வந்துவிட்டது என்றுகூறி மயிலிட்டி துறைமுகத்தை இல்லாது செய்யும் நடவடிக்கையாகவும் அமைந்துவிடும் என்று தெரிவித்தார். 

M1 M2 M3 M4 M5 M6 M7 M8 M9