வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல சிறார்களுக்கு காலணிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

l1வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த குழந்தைச்செல்வம் த.அர்ச்சனா அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பார்வையிழந்த செவிப்புலன் இழந்த வாய்பேச முடியாத மாணவர்களை பராமரிக்கும் இல்லமான இனிய வாழ்வு இல்லத்தைச் சேர்ந்த 49 சிறார்களுக்கு காலணிகளை வழங்கிவைத்துள்ளார். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் இனிய வாழ்வு சிறார்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக 21.07.2016 அன்று இப் பொருட்கள் மாணவர்களிடம் கையளிக்கபட்டுள்ளது. இந் நிகழ்வில் குழந்தை அர்ச்சனாவை மகிழ்விக்கும் முகமாக இனிய வாழ்வு இல்ல சிறார்களினால் பல நாட்டியம் மற்றும் கண்பார்வையிழந்த செல்வி.தமிழினியின் இனிய குரலில் பாடலும் இடம்பெற்றது. இக் கைங்கரியத்தை ஆற்றிய குழந்தை செல்வம் அர்ச்சனா சீரோடும் சிறப்போடும் பல்லாண்டுகாலம் பல கலைகளும் பெற்று வாழ வேண்டும் என இறைவனை பிராத்திப்பதோடு இச் சிறுவயதிலேயே ஈழத்து தமிழ் மக்கள் எவ்வாறன துயரில் உள்ளாக்கபட்டுள்ளார்கள் என்பதையும் தங்களது பிள்ளைகளும் அறிந்திருக்க வேண்டும் எதிர்காலத்தில் இவர்களும் தொடர்ந்து எம் மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்ற நல் எண்ணத்துடன் செயலாற்றிய அர்ச்சனாவின் பெற்றோருக்கும் இல்ல சிறார்கள் சார்பாகவும் இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).

l l2 l3 l4