ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016-(படங்கள் இணைப்பு)-

P2யாழ். ஆனைக்கோட்டை உயிரப்புலம் ஐக்கிய சனசமூக நிலைய அடைக்கலநாயகி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நேற்றையதினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. முன்பள்ளியின் தலைவர் பரஞ்சோதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, கௌரவ விருந்தினர்களாக வலி தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் சற்குணராஜா, ஆர்.கே. ரட்ணராஜா ஆகியோரும், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக புனித அடைக்கலநாயகி தேவாலய பங்குத்தந்தை, அருட்சகோதரி புனிதராணி, நவலட்சுமி சந்திரகுமார் (அதிபர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன. P1 P3 P4 P5 P6 P7