புன்னாலைக்கட்டுவன் வடக்கு மாதர் சங்கத்திற்கு சுழற்சிமுறை கடனும், சனசமூக நிலையத்திற்கு தளபாடங்களும் பா.உ த.சித்தார்த்தன் வழங்கிவைப்பு- (படங்கள் இணைப்பு)-
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு மாதர் சங்கத்தினருக்கு சுழற்சிமுறைக் கடன் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் முன்னைய மாகாணசபை உறுப்பினர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட பணத்தின்மூலம் மேற்படி சுழற்சிமுறை கடன் வழங்கப்பட்டது. புன்னாலைக்கட்டுவன் வடக்கு அபிவிருத்திச் சங்கத் தலைவர் கெங்காதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுழற்சிமுறைக் கடன் வழங்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களனின்; பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து புன்னாலைக்கட்டுவன் வடக்கு சனசமூக நிலையத்திற்கான தளபாடங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.