துணுக்காய், பாண்டியன்குளம் பகுதியில் 20 குடும்பங்களுக்கு மாகாணசபை உறுப்பினர். க.சிவநேசன் உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_0042முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் பாண்டியன்குளம் பகுதிகளைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை வட மாகாணசபை உறுப்பினர். திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் நேற்றுமுன்தினம் (27.07.2016) வழங்கிவைத்துள்ளார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து மேற்படி நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் திரு. சிவபாலசுப்பிரமணியம், துணுக்காய் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட உதவி ஆணையாளர், சமூக ஆர்வலர் தேவா மற்றும் யசோதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். IMG_0042IMG_0043