வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு-

Yஎமது புலம்பெயர் உறவான பிரான்ஸைச் சேர்ந்த உதயகுமார் தர்சினி இன்றைய தினம் தனது தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்கு புதிய துவிச்சக்கரவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின் சிபாரிசின் கீழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக இன்று சங்க தலைமை காரியாலத்தில் வைத்து நவாலி மகாவித்தியாலயத்தை சேர்ந்த சி.நிரஞ்சிகா மற்றும் வட்டு இந்து கல்லூரியை சேர்ந்த வி.பவாணி ஆகிய இருவருக்கும் இவ் துவிச்சக்கரவண்டிகள் கையளிக்கபட்டன. மேற்படி இரு மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்கும் இவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை தொடர்வதற்கு உதவியாக துவிச்சக்கரவண்டிகள் தந்ததவுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக தமது பிள்ளைகள் போன்றும் இவர்களும் கல்வியில் சிறந்து விளங்கி சமூகத்தில் சிறந்த பிரஜையகளாக உருவாக வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் இக் கைங்கரியத்தை தனது தாயாரின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கி வைத்த உ. தர்சினிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் நன்றிகளை கூறிக்கொள்வதுடன் இவரின் தாயாரான அ.சொர்ணமலர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).

YY1x Y2