முல்லை. மகளிர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும் மாவட்ட பயனாளிகளுக்கும் தையல் இயந்திரம், சமையல் உபகரணங்கள், தளபாடங்கள் அன்பளிப்பு-படங்கள் இணைப்பு-

DSC04458முல்லைத்தீவு மணற்குடியிருப்பு பகுதியில் கிராமிய மீன்பிடி மற்றும் மீன்பிடி அமைச்சின் மூலம் மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் ஊடாக முல்லைத்தீவு பல்வேறு மகளிர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும் மாவட்ட பயனாளிகள் சிலருக்கும் தையல் இயந்திரம், சமையல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. மேற்படி நிகழ்வில் கௌரவ மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், அமைச்சின் செயலாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் (பவன்), துரைராசா ரவிகரன்

மற்றும் மாவட்ட திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் அத்துடன் முல்லை மாவட்ட பங்குத்தந்தை மேலும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர் மேலும் இந்நிகழ்வை எழுத்தாளர் புரட்சி தலைமை ஏற்று நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. DSC04458DSC04445 DSC04467 DSC04471 DSC04472 DSC04473 DSC04475