யாழ். கல்விளான் காந்திஜீ சனசமூக நிலைய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016-(படங்கள் இணைப்பு)-

kalvilan5யாழ். கல்விளான் காந்திஜீ சனசமூக நிலைய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நிகழ்வானது 28.07.2016 அன்று முன்பள்ளியின் தலைவரின் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விளையாட்டுப் போட்டியினை ஆரம்பித்து வைத்தார். இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டிய சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Kalvilan Ganthigee Mun-palli Kalvilan kalvilan2 kalvilan3 kalvilan4 kalvilan5