வட்டு. இந்து வாலிபர் சங்கம் ஊடாக லண்டன்வாழ் உறவின் தொடர் உதவிகள்-(படங்கள் இணைப்பு)-

vaddduவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்களால் யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த கடந்தகால யுத்தத்தின்போது முற்றாக பார்வையிழந்த செல்வி.அற்புதராஜா அனித்தலா என்பவருக்கு முதற்கட்டமாக ஒரு மாத காலத்திற்க்கு தேவையான ரூபா 10,000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அவர்களது இல்லத்தில் வைத்து இன்று கையளிக்கப்பட்டன. செல்வி.அ.அனித்தலா இறுதி யுத்தத்தின்போது ஒட்டிசுட்டான் பகுதியில்; தனது இரு கண்களையும் இழந்துள்ள இவர் தற்போது புத்தூர் பகுதியில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகின்றார். அண்மையில் இவரது தாயாரினால் எமக்கு தொலைபேசி; மூலம் விடுக்கபட்ட வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் மனிதாபிமான கைங்கரியம் இடம்பெற்றது. அவரின் தாயார் தெரிவிக்கும்போது, நான் கணவன் அற்ற நிலையில் முத்த மகனை போராட்டத்தின்போது இழந்து, திருமணமாகாத முற்றாக பார்வையிழந்த எனது மகள் அனித்தலாவும் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட புத்தி சுயாதீனம் குறைந்த மகளும் அவரின் ஐந்து பிள்ளைகளுமாக பல இன்னல்களுடன் வாழ்க்கையை ஓட்டிவருகின்றோம் என்று கூறியதோடு, தாம் அன்றாட உணவுக்குக்கூட கஸ்டபடுவதாகவும் தான் செய்யும் கூலி தொழில்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். அனித்தலா க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவி என்பதனால் இவரின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு விசேட தேவைக்குரிய மாணவர்கள் தங்கி கல்விகற்கும் இல்லத்தில் தங்க வைத்து பார்வையற்றோர் கல்வி கற்க்கும் முறையை பின்பற்றி தொடர்ந்து கல்வி கற்ப்பிபதற்க்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். வாரம்தோறும் எம் ஊடாக தொடர்ந்து இவ்வாறு தாயகத்தில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு தானே முன்வந்து உலர் உணவு பொதிகளை வழங்கி அவர்களின் அடிப்படையான மூன்றுவேளை உணவிற்கு வழி அமைத்துக்கொடுக்கும் பரஞ்சோதி லோகஞானம்; அவர்களின் மனிதபிமான எண்ணத்தினை வளர்த்தெடுத்த தாய்க்கும் அவர்களது குடும்பத்திற்கும் பாதிக்கப்பட்ட உறவுகள் சார்பிலும் சங்கத்தின் சார்பிலும் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். வட்டு இந்து வாலிபர் சங்கம்.

vaddduvaddu..