ஐ.தி சம்பந்தன் அவர்களுடைய இரண்டு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-
ஐ.தி சம்பந்தன் அவர்களுடைய இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் சுடரொளி வெளியீட்டுக் கழகம் ஊடாக நேற்றையதினம் (31.07.2016) மாலை வெளியிட்டு வைக்கப்பட்டன. தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் சாதனையாளர் ஐ.தி. சம்பந்தன் அவர்களின் விழாமலர் என்பனவே இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் விரிவுரையாளர்கள் பலரும் கலந்துகொண்டு மேற்படி நூல்களின் சிறப்பினை எடுத்துக் கூறினார்கள். பெருந்திரளான மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள். மேற்படி நூல் வெளியீட்டுவிழா நிகழ்வின் இறுதியில் பண்டாரவன்னியனின் நாடகமும் அரங்கேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும்.