சுதுமலை ஈஞ்சடி நாவலர் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)-

sudumalai (5)யாழ். சுதுமலை ஈஞ்சடி நாவலர் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நாவலர் பாடசாலையின் ஸ்தாபகத் தலைவர் திரு. ஈ.பேரின்பநாயகம் அவர்களது தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி கந்தையா சிறீகணேசன், அ.பேரின்பநாயகம் (அதிபர், மானிப்பாய் மெமோரியல், ஆங்கிலப் பாடசாலை), திரு.மகேந்திரன் (அதிபர். சிம்மயா பாரதி வித்தியாசாலை, சுதுமலை), வி.கே. தனபாலன் (சுதுமலை வடக்கு கிராம அலுவலகர்), திரு. கௌரிகாந்தன் (தலைவர், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்), செல்வி ம.பிரியதர்சினி (தலைவர் சுதுமலை வடக்கு மாதர் அபிவிருத்திச் சங்கம்), திருமதி நளினி பரஞ்சோதிநாதன் (தலைவர், சுதமலை தெற்கு மாதர் அபிவிருத்திச் சங்கம்) ஆகியோரும், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்விலே உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள், அனைத்து சிறுவர்களும் விநோதபுடைப் போட்டியிலே பங்குபற்றியிருந்தமை பாராட்டுதலுக்குரியது. பெற்றோர்கள் எடுத்துக்கொண்ட கரிசனையை இதிலே காணக்கூடியதாக இருக்கின்றது. இப்படியான கரிசனைகள் இருந்தால் குழந்தைகள் ஒரு சிறந்த பிரஜைகளாக குடும்பத்துக்கும் சமூகத்திற்கும் உதவக்கூடியவர்களாக வருவார்கள் என தெரிவித்தார்.

sudumalai (3)sudumalai (4) sudumalai (5) sudumalai sudumalai (2) sudumalai (1)