Posted by plotenewseditor on 2 August 2016
Posted in செய்திகள்
யாழ். நவக்கிரி இந்து இளைஞர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)-
யாழ். நவக்கிரி இந்து இளைஞர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நிகழ்வு நவக்கிரி இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் திரு, நிர்மலநாதன் அவர்களின் தலைமையில் 31.07.2016 அன்று இடம்பெற்றது. மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. ராதாகிருஸ்ணமூர்த்தி (அதிபர், அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை, நவக்கரி), திரு. கேசவன் (சமுர்த்தி உத்தியோகத்தர்), திரு. சுதர்சன் (கிராம சேவையாளர், நவக்கிரி), திருமதி ஞானமாலா (பொருளாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு. த.பாலசுப்பிரமணியம் (முன்னைநாள் மின்சார சபை உத்தியோகத்தர்), அ.கவிதா (குடும்பநல உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்துசிறப்பித்தனர். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், கொடியேற்றல் என்பன இடம்பெற்று விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்றன. இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டிய பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பெற்றோர்களும், பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

