இளைஞர்கள், யுவதிகள் வாக்காளர்ளுக்கான நிகழ்ச்சித் திட்ட நிகழ்வின் ஊடக அறிக்கை

18+ 067jpg2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அன்பிற்கும் நட்பிற்குமான இளைஞர் வலையமைப்பும் ஒன்றிணைந்து மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி எனும் பயிற்சியினைப் பெறுவோருக்கான வரவேற்பு நிகழ்வு மற்றும் ஆரம்பத்தில் பயிற்சியினை பெற்றுக் கொண்ட குழுவிற்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அதே போன்று   YOUTHVOTESL நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்தல் போன்ற செயற்பாடுகள் வவுனியாவில் மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்விற்காக வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வருகை தந்து தங்களினுடைய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். இந் நிகழ்விற்கான விசேட அதிதியாக வருகைதந்திருந்த உதவித் தேர்தல் ஆணையாளர் நாளக்க ரத்நாயக அவர்கள், இந்த நிகழ்வானது எமது YOUTHVOTESL  வேலைத்திட்டத்தின் ஆரம்ப தினமாகும் எனக் கூறினார் . 18 வயதியை பூத்தி செய்கின்ற இளைஞர்களில் ஒரு பகுதியினர் நிகழ்கால தேர்தல் வாக்காளர்களை பதிவு செய்யும் செயற்பாட்டின் போது அவர்கள் உள்வாங்கப்படாமையை கருத்தில் கொண்டு வாக்குப் பதிவினை ஒழுங்கு முறைப்படுத்தும் நோக்குடன்  YOUTHVOTESL வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் முறைக்கான சர்வதேச தேசிய அமைப்பு (IFES) போன்ற அமைப்புகளுடன் ஒன்றினைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வின் மற்றுமொரு முக்கிய பகுதியாக மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி எனும் கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஆரம்ப வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது. இவ் மாணவர்களுக்கான விசேட செய்தியொன்றினை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அவர்கள் அனுப்பி வைத்திருந்தர். அதில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.
இளைஞர்களின் திறனைக்கட்டியெழுப்புவதற்காக மனித உரிமைகளும் நலாட்சியும் என்ற தலைப்பில் இப்பயிற்சியை ஒழுங்குபடுத்தியதற்கு  Afriel நிறுவனம் பாராட்டப்பட வேண்டும். இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஒரு சில வார்த்தைகளை இவ் இளைஞர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
30 வருட யுத்தத்தால் பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்தஇலங்கையின் எல்லா சமூகங்களிலும் இளைஞர்கள் பெரும் இடர்களையும் உரிமை மீறல்களையும் சந்தித்து இருக்கிறார்கள். யுத்தம் முடிவடைந்த பின் நாம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைகளையும் உடைந்து போன சமூகங்களையும் மீள்கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபடும் இவ்வேளையில், எமக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியமாகின்றது. போரால் பாதிக்ப்பட்ட சமூகங்களை கட்டியெழுப்பும் முயற்சியில் நாம் உடைந்துபோன வீடுகளையும்
தொலைந்து போன சொத்துக்களையும் மட்டுமல்ல, சமூகங்களுக்கும்  இனங்களுக்கும்  இடையே உடைந்துபோன உறவுகளையும் சீர்செய்வது   

முக்கியம்.       
ஓவ்வொரு பிரஜைக்கும் தமக்கும் தமது குடும்பத்தின் நலத்திற்கு மட்டுல்லாது தமது சமூகத்தினதும் நாட்டினதும் நலத்திற்காகவும் பங்களிக்க கடமையுள்ளது. ஆனால் கட்நத காலங்களில் பல காரணங்களால் (யுத்தமும் ஒரு காரணம்) இக்கடமை இது அரிதாகவே காணப்பட்டது. உலகலாவிய ரீதியில் தற்போது யுத்தம் மற்றும் வன்முறை பரவலாக காணப்படுகின்றது. யுத்தம் மற்றும் வன்முறை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்ககையில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. யுத்தங்களில் உயிர் இழப்பவர்கள் பெரும்பாலானோர் சிறுவர்களாகவே காணப்படுகிறார்கள். இவ் யுத்தங்களில் போராளிகள் பெரும்பாலானோர் இளைஞர்களாகவே காணப்படுகிறார்கள். இதனால் இவர்கள் இள வயதிலேயே சாதாரண மற்றும் அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் அவர்களின் கல்வி உரிமைகளையும் அனுபவிக்க முடியாமல் பெரும் மன அதிர்ச்சி மற்றும் உளவியல் தாக்கங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இலங்கையில் 2015 ஆம் ஆண்டு நாம் பல அரசியல் மாற்றங்களைக் கண்டோம். அதோடு மனித உரிமைகள் பாதுகாப்பிலும் சில மாற்றங்களைக் கண்டோம். ஆனாலும், அமைப்பு முறைமை மற்றும் சட்டங்களை முழுமையாக அமுல்படுத்துவது, மற்றும் சட்டங்ளின் பாதுகாப்பை பிரஜைகள் முழுமையாக அனுபவிப்பது ஆகியவற்றில் இன்னும் பல மாற்றங்களை நாம் காணவேண்டியுள்ளது. இதை அடைவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். ஜனநாயத்தையும் மனித உரிமைகளையும் மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனநாயகக் கொள்கைகளை நாம் ஒவ்வொருவரும் உள்வாங்கிக்கொள்வது மிகவும் முக்கியம். இவ்வாறான சமூகத்தை உருவாக்குவதற்கு நடைமுறையில் நீங்கள் என்ன பங்களிப்பை செய்ய வேண்டும்? நாம் எம் உரிமையை அதிகாரத்துடன் கோரும் போது நாம் மற்றவர்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். நாம் சட்டத்தை மதித்து மற்றவர்களை சமமாக சமத்துவத்துடன் நடத்த வேண்டும். அநீதி நடக்கும்போது அதை பயமில்லாது தட்டிக்கேட்க வேண்டும். ஏனெனில், இன்னொருவருக்கு இழைக்கப்படும்; அநீதி எம்ஒவ்வொருவருடைய உரிமையையும் எம்மிடமிருந்து பறிக்கின்றது. இச்சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு உரிமை மீறலும் சட்டத்திற்காக இருக்கும் அவமதிப்பை அதிகரித்து, இச்சமூகத்தில் சமத்துவம், மனித உரிமைகள், நீதி ஆகியவை முக்கியமல்ல என்ற அபிப்பிராயத்தை உருவாக்கும். ஆகையால் நீங்கள் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கப்படாவிட்டாலும் வேரொருவருக்கு இழைக்கப்படும் அநீதி உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற பிழையான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்காதீர்கள். இளைஞர்களிடையே மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கு எமது கல்வித்திட்டங்களிலும் பல மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில் மனித உரிமைகளை உள்ளடக்குவது மிகவும் முக்கியமாகும். இவ்விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அரசாங்கத்திடம் சிபார்சுகளை செய்து அழுத்தம் கொடுக்கும். இத்துடன், மனித உரிமைகளில் பயிற்சி மற்றும் அனுபவம் பெறுவதற்கு இளைஞர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  Internship திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதைப்பற்றிய மேலதிக விபரம்ங்கள் உங்கள் பிராந்தியஙங்களிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இளைஞர்களாகிய நீங்கள் ஐயம், பயம் அவற்றால் கட்டுப்படாமல் மேலும் உங்கள் திறன்களை வளர்ப்பதற்கும், அறிவை மேம்படுத்துவதற்கும் கிடைக்கும் வாய்ப்புக்களை முற்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சவால்களை எதிர்கொண்டு உங்கள் சமூகங்களில் தலைவர்களாக உருவாகி,; எல்லோரினதும் மனித உரிமைகள் பாதுகாகக்கப்பட்டு, அவர்கள் பாராபட்சம், பயம், வன்முறை இன்றி வாழக்கூடிய ஒரு இலங்கையை எதிர்காலத்தில் உருவாக்குவது உங்கள் பொறுப்பாகும்.

18+ 01 18+ 02 18+ 03 18+ 04 18+ 05 18+ 06