புளொட் அமைப்பின் ஜேர்மனி கிளையினரால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.! (படங்கள் இணைப்பு)

velo01தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜேர்மன் கிளையினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகள் வவுனியா வெளிக்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு 06.08.2016 சனிக்கிழமை அன்று  ‘கல்வியால் எழுவோம்’ செயற்றிட்டத்தின் மூலம்  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்  வவுனியா மாவட்ட  தலைமைக் காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.இந் நிகழ்வில் ஜேர்மனி கிளையின் தோழர் பவானந்தன் அவர்களுடன் இணைந்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) திரு நா.இரத்தினலிங்கம்(குருபரன்), புளொட் அமைப்பின் பொருளாளர் திரு இளங்கோ,  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும் செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான திரு ஜெகதீஸ்வரன்(சிவம்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணி சார்பான  செயற்குழு உறுப்பினர் திரு சு.காண்டீபன்,  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொருளாளர் திரு நிஷாந்தன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், அமைப்பாளர் திரு வ.பிரதீபன்  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

velo00velo01velo02