book release02யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறை விரிவுரையாளரும், சுயாதீன ஆராட்சியாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு என்ற நூலின் வெளியீட்டு விழா 06-08-2016 அன்று தமிழருவி த.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலா மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியா தமிழ் சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இவ் நூல் வெளியீட்டு விழாவில் நூலின் முதற் பிரதியை பிரித்தானியா தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைச்செயலாளர் கலாநிதி இரவீந்திரநாதன் அவர்கள் பெற்றுக்கொள்ள. தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தாத்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராசா, திருமதி.அனந்தி சசிதரன், ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தாத்தன்
தமிழ் மக்களின் அரசியலமைப்புத்திட்டம் தொடர்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை என சுட்டிக்காட்டினார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் இருக்கும் போட்டிகள் நம்பிக்கையீனங்கள் காரணமாக தனியாக முடிவுகள் எடுக்கும் நிலமை பாராளுமன்றத்திலே வருமாகவிருந்தால் நாங்கள் அதிலே ஒரு பங்கு தாரராக இருக்க மாட்டோம் என தெரிவித்தார்.

book release01 book release02 book release03 book release04 book release05 book release06 book release07 book release08 book release09