putin_erdoganரஷியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் சிரியாவில் உள்ள நெருக்கடியை சரி செய்வது குறித்து பொதுவான இலக்குகளை வைத்திருப்பதாகவும் மேலும் இரு நாடுகளின் கருத்துகள் ஒத்துப்போகாத பட்சத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவானுடனான சந்திப்பிற்கு பிறகு புதின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளுக்குமான உறவில் சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு சமரசத்தின் வெளிப்பாடாக உள்ளாது.இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தில் ரஷியாவுடன் சேர்ந்து பணி புரிய ஆயுத்தமாக இருப்பதாக எர்துவான் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் முதல் அணுமின் நிலையத்திற்கான மாஸ்கோவுடனான ஒப்பந்தம் குறித்தும் எர்துவான் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு எர்துவான் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு அரசின் பதிலடி நடவடிக்கைகள் அளவுக்கதிகமாக இருந்ததாக துருக்கியின் மேற்கத்திய கூட்டாளி நாடுகளின் விமர்சனங்கள் அதிகரித்துள்ள வேளையில், எர்துவானின் ரஷ்ய பயணம் அமைந்துள்ளது.