J 002பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வது என பல வாக்­கு­று­தி­களை சர்­வ­தே­சத்­திற்கு உறுதி­ய­ளித்­துள்ள போதும் அதனை நிறை­வேற்­றாது பின்­வாங்கி செல்­வது துர­திர்ஷ்­டமே என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் தெரி­வித்தார்.

அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்தி அர­சியல் கைதி­களை விடுதலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பின் ஏற்­பாட்டில் யாழ்.நகரில் நேற்று நடத்தப்பட்ட கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.  அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் பல தட­வைகள் அர­சாங்­கத்தால் எமக்கு உறுதி­மொழி வழங்­கப்­பட்­ட­போதும் அந்த உறு­தி­மொ­ழிகள் பல மாதங்கள் கடந்தும் இதுவரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

நூற்­றுக்கும் மேற்­பட்ட தமிழ் அர­சியல் கைதிகள் இன்­னமும் சிறையில் வாடிக் கொண்டிருக்­கின்­றனர். உண்­மை­யி­லேயே நல்­லி­ணக்­கத்தைத் தற்­போ­தைய அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­து­கி­றது என்றால் அவர்கள் அனை­வரும் எந்­த­வித நிபந்­த­னை­களுமின்றி உடன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்டும். அதன் மூலம் தான் அர­சாங்­கத்தின் உண்மை­யான நல்­லி­ணக்­கத்தை எமது மக்களுக்கு உணர்த்த முடியும். ஆகவே, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வரை எமதுமக்களின் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

J 001 J 002 J 003 J 004 J 005