மூன்று ஆண்டுகளில் 187 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

sri lankaஇலங்கையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த 187 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது, கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர் ஜயந்த சமரவிர எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய அமைச்சர் கயந்த கருனாத்திலக இதனை தெரிவித்தார்.
சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நீதி அமைச்சரினால் ஓய்வுபெற்ற உச்சமன்ற நீதிபதிகள் இருவரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய 2015-ஆம் ஆண்டு 117 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் கருனாத்திலக, 2016-ஆ ம் ஆண்டில் இதுவரை 70 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1.36 டிர்லியன் ரூபா வெளிநாட்டுக் கணக்குகளில் மறைத்து வைப்பு

ranil wickramaகடந்த ஆட்சிக் காலத்தில் குறைந்தபட்சம் 1.36 டிர்லியன் ரூபா பணம் வெளிநாடுகளிலுள்ள, அரை அரச நிறுவனங்களின் கணக்குகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த கடன் தொகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவால், நேற்று சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, இலங்கை பொருளாதாரத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, கூறிய பிரதமர், இந்த வருடம் மார்ச் 31ம் திகதி அளவில், இலங்கை வழங்கவிருத்த கடன் தொகை 8.77 டிர்லியன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய குழு, வழங்கும் அறிக்கைக்கு அமைய முழு கடன் தொகை தொடர்பில் சரியான கூற முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் 9 வருடங்களுக்கு கடன் பெறப்பட்டுள்ளது. இதனால் அக் காலப் பகுதியில் அரசாங்கத்தின் கடன் தொகை மூன்று மடங்காக அதிகரித்து, 7.39 டிர்லியனான உயர்வடைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் கடன் பெற்றமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை ராஜபக்ஷ அரசாங்கம் நிராகரித்துள்ளதோடு, அவை பெறப்பட்டது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.