கொழும்பு நகரத்தில் உள்ள சட்டவிரோத நடைவியாபாரிகளை அகற்ற நடவடிக்கை

colmboகொழும்பு நகரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான சட்டத்துக்கு முரணான நடை வியாபாரிகள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.
அதன்படி சட்டவிரோத நடை வியாபாரிகளை உடனடியாக அகற்றுமாறு மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா பொலிஸாருக்கும், கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட ஆய்வின் போது 1158 சட்டவிரோத வியாபாரிகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
அண்மையில் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த ஆய்வு விபரம் குறித்து கூறப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு நகர எல்லைக்குள் 720 பேர் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அதில் 699 பேர் புறக்கோட்டை பிரதேசத்தில் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடியவர்கள் என்று தெரியவந்துள்ளது.

நடைபாதைகளில் அனுமதியற்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 221 லொத்தர் விற்பனை கூடங்களும், சட்டவிரோதமாக வாகனங்களில் விற்பனை செய்யும் 120 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் நடைபாதைகளில் 45 பத்திரிகை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த ஆய்வில் அறியமுடிந்துள்ளதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறியுள்ளது.

08 ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிப்பு
 
Fishஇலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் இருந்து சுமார் எட்டு ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக கடமையாற்றும் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ் பாலசுகமுனியமுக்கு அமைச்சர் இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெளிநாடொன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த மீன்கள், விநியோகம் செய்யப்படாமையினால் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுத்தியது யார் என்று  அறியுமாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

யாராவது தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ இதனுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களிடம் இந்த நட்டத்தை மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மணிலா சிறைச்சாலையில் 10 கைதிகள் கொலை 

philippineபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாக சிறை காவலர் காயம் அடைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சிறையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சித்ததின் ஓர் அங்கமாக இது இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போதைக் குற்றங்கள் தொடர்பில் சிறையில் உள்ள 8 குற்றவாளிகள் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்டோ போதை தொடர்புடைய குற்றங்களை எதிர்த்து கடுமையான பிரசாரங்களை தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. டஜன் கணக்கான விநியோகஸ்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மேலும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர.;

லிபியாவில் அரசு ஆதரவு படை முன்னேற்றம் மறுபுறம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

syria_aleppoலிபியாவில், இஸ்லாமிய நாடு என்ற ஐ.எஸ். தீவிரவாதக் குழுவின் செல்வாக்கு மிக்க பகுதியான சிர்டேவை அரசு ஆதரவு கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட ஐ.எஸ் படையினரால், தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்ட,  ஒகடோகு வளாகத்தைச் சுற்றிலும் உள்ள நிலக்கன்னிவெடிகள் மற்றும் குண்டுகளை அரசு ஆதரவுக் குழுவினர் அகற்றி வருகின்றனர். அரசு ஆதரவு குழுவினருக்கு,  அமெரிக்கப் படையினர் வான்வழிப் பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
அப்பகுதியில் ஆப்ரிக்க மற்றும் அரேபிய பிரதிநிதிதிகள் மாநாட்டு அரங்கமாகப் பயன்படுத்திய,  கட்டிடம் பலத்த சேதம் அடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.அதேநேரம் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகள் என இருதரப்பினரும் பிரித்து ஆக்கிரமித்துள்ள அலெப்போ நகரில், அரசு தரப்பின் பக்கத்தில் இருக்கும் முக்கிய வினியோகப் நிலப்பகுதி பாதையை துண்டிப்பதற்கு சிரியாவின் கிளாச்சியாளர்கள் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
அலெப்போவின் புறநகரை அடைந்ததும் மாற்றுப் பாதையை அரசப்படை தேர்ந்தெடுக்க வேண்டியதை கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் ஒன்று ஏற்கெனவே கட்டாயமாக்கியுள்ளது.
கனாசேர் பாதை என்று அறியப்படும் பாதை வழியாக விநியோகம் வருவதைத் தடுக்கவே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.