இலங்கை விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமானது-

Srilankan-Airlines-626x380விமானத்தின் தாமதத்தினால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்பதாக இலங்கை விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL554 என்ற விமானம் நேற்றுமாலை ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்க இருந்தது. எனினும் விமானத்தில் பணியாற்றும் பணியாளர்களில் ஒருவர் வருகை தராமையின் காரணமாக குறித்த விமானம் புறப்படுவதற்கு தாமதமாகியுள்ளது. சுமார் 15 மணித்தியாலங்கள் இந்த விமானம் தாமதமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் அந்த நாட்டு நேரப்படி இன்றுஅதிகாலை 4.00 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகளுக்கு தேவையான உணவுகள் மற்றும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டப்படி பயணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்றும் இலங்கை விமான நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளின் சோதனை நடவடிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு-

americaபுலி முன்னாள் போராளிகளை சோதனைகளுக்கு உட்படுத்த அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு விஷ ஊசி செலுத்தப்பட்ட விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்மையில் அமெரிக்க தூதுவரிடம் விடுதலைப் புலி முன்னாள் போராளிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சரால் உதவி கோரப்பட்டிருந்தது. அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை பரிசேதனைக்கு உட்படுத்துவதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், தற்போது இலங்கை வந்துள்ள அமெரிக்க வான்படை மருத்துவ அதிகாரிகளிடம் மருத்துவ பரிசோதனைகளுக்கான வசதிகள் இல்லாத நிலையிலேயே இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

southeast universityதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக இன்றுகாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடம் என்பவற்றுக்கான அடிக்கல்லினை நட்டி வைப்பதற்காகவும் மாணவர்களுக்கான விடுதியைத் திறந்து வைப்பதற்காகவும் இன்றுகாலை, உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வருகை தரவிருந்தார். பல்கலைக்கழகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக அமைச்சர் உறுதியளித்தால் மாத்திரமே அமைச்சரை பல்கலைக்கழகத்துக்குள் செல்லவிடுவது எனத் தெரிவித்து மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமையால் பிற்பகல் 02 மணிவரை அமைச்சரின் வருகை இடம்பெறவில்லை. பொறியியல் பீடம், வணிகம் மற்றும் முகாமைத்துவ பீடம் உள்ளிட்ட ஐந்து பீடங்களின் மாணவர்கள் ஒன்றிணைந்து இவ்வார்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். பல்கலைக்கழகம் சுதந்திரமாக இயங்குவதற்குத் தடையாகவுள்ள பொலிஸ் காவலரனை உடன் அகற்ற வேண்டும், அரசியல் நாடகத்தை பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்படுவதை உடன் நிறுத்து, விடுதியில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீள் குடியேற்ற செய்பாடுகள் இவ்வருடத்துக்குள் நிறைவு-

housing scheme (2)வடக்கில் இந்த வருட இறுதிக்குள் மீள்குடியேற்ற செயற்பாடுகள் நிறைவுறுத்தப்படும் என மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் காணியற்ற 936 குடும்பங்கள் உள்ளன. இதில் 971 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கீரிமலைக்கு அருகில் உள்ள காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் வீடுகள் அமைக்கபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 104 வீடுகள், பலாலி வடக்கு பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அதன் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் ஒக்டோபரில் நிறைவுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, காணியற்ற குடும்பங்களை குடியேற்றுவதற்காக 250 காணித்துண்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதற்கிடையில் காங்கேசனத்துறை, பளை, வலிகாமம் வடக்கு மற்றும் தையிட்டி ஆகிய இடங்களில் 450 ஏக்கர் நிலத்தை விடுவிக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு-

touristஇலங்கையில் உல்லாசப் பயணிகளின் வருகை கடந்த மாதம் (யூலை) உச்ச நிலையை எட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் இலங்கை வந்துள்ள உல்லாசப் பயணிகளின் தொகை 209,351என காணப்படுகின்றது. கடந்த வருடம் யூலை மாத முடிவில் கணக்கெடுக்கப்பட்ட உல்லாசப் பயணிகளின் தொகையை விட 19.1 வீத அதிகரிப்பை இது காட்டுகின்றது. 60 களில் பதிவுகள் ஆரம்பித்த பின் ஒரு மாதத்தில் மிக அதிகமான பயணிகளைக் கண்டது கடந்த மாதத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வழமையாக அதிக பயணிகளைக் காணும் இலங்கை உல்லாசப் பயணத்துறை இந்த வருடத்தில் யூலை மாதத்தில் அதிகளவான உல்லாசப் பயணிகளைக் கண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கப்பல் பணியாளர்கள் ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகளால் கைது-

arrestஇலங்கை கப்பல் பணியாளர்கள் 8 பேரை ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன், அவர்களின் கப்பலையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கப்பல் மூலம் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மூன்றாம் தரப்பொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சிய கடல் பாதுகாப்பு பிரிவினரால் கப்பல் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பணியாளர்களைக் கொண்ட அல் கலீதியா என்ற கப்பல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஃபேரா பிராந்தியத்தை அண்மித்த கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்தினால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கப்பல் பணியாளர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கையின் கொன்சியூலர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மெடிட்ரேனியன் கடலிலிருந்து 534 அகதிகள் மீட்பு, ஐவர் உயிரிழப்பு-

refugeesமெடிட்ரேனியன் கடலிலிருந்து 534 அகதிகள் இத்தாலிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பெரிய படகுகள், 9 சிறிய படகுகளில் மேற்படி அகதிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 534 அகதிகள் மீட்கப்பட்ட போதிலும் ஐந்து அகதிகள் மரணித்துள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும் இம்மரணங்கள் சம்பவித்தது தொடர்பான எந்த ஒரு தகவல்களும் இதுவரை கிடக்கப்ப்ர்ரவில்லை என ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலிய, ஜேர்மன் கடற்படையினர் கூட்டாக இணைந்து இந்த மீட்பு பணியை மேற்கொண்டுள்ளார்கள். எனினும் குறித்த நாட்டு அகதிகள் எந்த நாட்டவர் என்பது குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை. அகதிகளுக்கான அகில உலக ரீதியான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரையில் 100,244 அகதிகள் படகுகள் மூலம் இத்தாலியை வந்தடைந்துள்ளனர் என்றும் இவர்களில் பலர் லிபியா நோக்கி தொடர்ந்து பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு PATH TO THE FUTURE வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக சுமார் 326,815 ரூபா பெறுமதியில் உதவி-(படங்கள் இணைப்பு)

b7கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரம் பிரதேசத்தில் விசேட தேவைக்குரிய மாற்றுவலுவுடைய மற்றும் முற்றிலும் இயங்க முடியாத பிள்ளைகள் என ஆரம்பகட்டமாக 14 பிள்ளைகளுடன் இயங்கி வருகின்றது. இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி இல்ல பிள்ளைகளை பாரமரிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தமக்கான சில அடிப்படை உதவிகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதனை எமது புலம்பெயர் அமைப்பான PATH TO THE FUTURE இன் கவனத்தித்திற்கு கொண்டு சென்றதையிட்டு அவர்களின் இல்லத்திற்குத் தேவையான அடிப்படை பொருட்கள் இயன்மருத்துவ பிரிவிற்கான கட்டிடம் ஒரு மாதத்திற்கு தேவையான பிள்ளைகளுக்கான பம்பஸ் மற்றும் நிர்வாக ஊழியார்களுக்கான யூலை மாதக் கொடுப்பனவு என சுமார் ரூபா 326,815 எமது சங்கத்தின் ஊடாக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
1ம் கட்டம்.
இல்ல பிள்ளைகளுக்கு சுமார் 32985 ரூபா பெறுமதியான 15 தலையணைகள் 15 துவாய் 15 பெற்சீட் 15 நுளம்பு வலை 30 சிறிய வாளி 2 பெரிய வாளி 15 தலையணை உறை என்பன வழங்கப்பட்டுள்ளன.
2ம் கட்டம்.
இயன்மருத்துவ பிரிவிற்கான கட்டிடம். கட்டிடத்திற்கான பொருட்கள் கொள்வனவு – 106710 ரூபா கட்டிடத்திற்கான கூலி மற்றும் இதர செலவு 66560 (வங்கி வைப்பு) விளம்பர முகப்பிற்கான செலவு 3600 ரூபா என்பன வழங்கப்பட்டுள்ளன.
3ம் கட்டம்.
பிள்ளைகளுக்கான ஒரு மாதத்திற்கான பம்பஸ் 30560 ரூபா.
4ம் கட்டம்.
நிர்வாக ஊழியார்களுக்கான யூலை மாதக் கொடுப்பனவு 90,000 ரூபா.
PATH TO THE FUTURE இனால் எமது சங்கத்தின் ஊடாக 4 கட்டங்களாக சுமார் 326,815 ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் நிதி என்பன இதுவரை காலமும் வழங்கப்பட்டுள்ளதுடன். ஏதிர்காலத்தில் 100 பிள்ளைகளை பாரமரிப்பதற்கு கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பிற்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கான ஒழுங்கமைப்புக்களும் PATH TO THE FUTURE அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

b b1 b2 b3
b5
b6 b7 b8 b9