ஓட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பகுதிகளில் மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் வாழ்வாதார உதவி-(படங்கள் இணைப்பு)-
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் நேற்றையதினம் வட மாகாணசபை உறுப்பினர். திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் பிரதேச கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தினூடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன. மேற்படி நிகழ்வில் ஓட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.