தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரையும், பரிசளிப்பும், நூல் வெளியீடும்-(படங்கள் இணைப்பு)

 தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரையும், பரிசளிப்பும், நூல் வெளியீடும் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் 27.08.2016 சனிக்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் புளொட் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர் கௌரவிப்பினைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை சூடல், தமிழ்த்தாய் வாழ்த்து, மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன. வரவேற்புரையினை செ.சிவசுப்பிரமணியம் அவர்களும், தலைமையுரையினை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் நிகழ்த்தினார்கள்.இதனையடுத்து பேச்சுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியரின் பேச்சுக்கள் இடம்பெற்றன. தொடர்ந்து நினைவுப் பேருரையினை வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் நிகழ்த்தியையடுத்து, ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமை மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலினை முதலமைச்சரிடமிருந்து நிகழ்வுக்கு வருகைதந்திருந்த அரசியல்வாதிகள், சமுக ஆர்வலர்கள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பேச்சுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியர்க்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. நன்றியுரையினை அமிர்தலிங்கம் அறக்கட்டளையின் தங்கமுகுந்தன் அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன், சந்திரகுமார், வட மாகாணசபை எதிர்கட்சித் தலைவர் தவராஜா, தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், முன்னைநாள் மாவட்ட அபிவிருத்திச்சபைத் தலைவர் ராஜேந்திரன், மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், சயந்தன், வலிமேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

    asdsd (24)asdsd (22)      asdsd (23)     asdsd (1)