Header image alt text

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம்-

V.T.இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் நாளை (02.09.2016)வெள்ளிக்கிழமை காலை 7மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. 31வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெறவுள்ளது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வர்த்தகர் சுலைமான் படுகொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட கைது-

fgddகொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசித்துவந்த வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொலையை மேற்கொண்ட சந்தேகநபரையும் அதன்பின்னர் வர்த்தகரின் சடலத்தை வாடகை வாகனம் மூலம் கொழும்பில் இருந்து மாவனெல்ல, ஹெம்மாத்தகம பகுதிக்கு கொண்டு செல்ல இணங்கிய குழுவினரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆடைத்தொழில்துறையை சேர்ந்த பிரபல வர்த்தகரான மொஹமட் சுலைமான், கப்பம் கோரப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார். கடந்த 21ஆம் திகதி இரவு கார் ஒன்றில் வந்த குழுவினர் குறித்த வர்த்தகரை அவரது வீட்டிற்கு அருகில் வைத்து கடத்திச் சென்றிருந்தனர். இதன்பின்னர் மாவனெல்ல பகுதியிலிருந்து 24ஆம் திகதி அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் மேலும் இருவரை கொழும்பு குற்றப்பிரிவினர் கைதுசெய்துள்ளதாக கூறப்படுகின்றது. சந்தேகநபர்கள் 22 மற்றும் 23 வயதானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கிராண்ட்பாஸ் மற்றும் சேதவத்தை பகுதிகளைச் சேர்ந்த இருவரே, இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டனர் என்றும் இவர்களே, சுலைமானின் தகப்பனாரிடம் கப்பம் கோரியிருந்தனர் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வடமாகாண சுகாதார அமைச்சினால் விஷ ஊசி மருத்துவ பரிசோதனை-

grவிஷ ஊசி விவகாரம் மருத்துவ பரிசோதனைக்கான விபரம் விஷ ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் 01.09.2016 தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மத்தியில் தமது உடல் நலம் தொடர்பில் நிலவுகின்ற கவலைகளைக் கருத்திற்கொண்டு, வட மாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அவர்களது நலன்கள் தொடர்பாக எமது அமைச்சு கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம் மேற்படி புனர்வாழ்வு பெற்றவர்கள் தமது உடல்நிலை குறித்து மேற்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளையும், மருத்துவக் கவனிப்பையும் வழங்க வடமாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, இத்தகைய மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்கள் பின்வரும் வைத்தியசாலைகளில் உரிய வைத்திய அதிகாரிகளைச் சந்தித்து தமக்கான ஆலோசனைகளையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும். Read more

கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கு கடும் பாதுகாப்பு-

UN officeகொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு முன்பாக கடும், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மேலதிக பாதுகாப்புக்காக, விசேட அதிரடிப்படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு, புதன்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்தார். அவருடைய வருகையை எதிர்த்தும், சர்வதேச விசாரணைக்கான அதிகாரங்களை பிரயோகிக்க வேண்டாமென வலியுறுத்தியும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்கு நீதிக்கோரி ஐக்கிய சமாதான முன்னணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில், அவரது வருகையையொட்டி கொழும்பில் உள்ள பிரதான வீதிகளில் ஐ.நா கொடியும், தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு-

namalநிதி மோசடி சட்டத்தின்கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். குறித்த விசாரணை அறிக்கை முழுவதுமாக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி, சட்டமா அதிபரின் பணிப்புரை கிடைக்கப் பெற்றதும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காத இருவரை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமாறும் பொலிஸார் இதன்போது கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இருவருக்கும் பிடியாணையையும் பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு மீளவும் டிசம்பர் 8ம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சேர்த்த 45 மில்லியனுக்கும் அதிகமாக பணத்தைக் கொண்டு ஹெலோகோப் எனும் நிறுவனத்தில் பங்குகளைக் கொள்வனவு செய்ததாகவே இவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம்-

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று அதிகாலை சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். எஸ்.கியூ 469 என்ற சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக அவர் பயணித்துள்ளார்.

பிரதமருடன் மேலும் 5 பேர் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். சிங்கப்பூரில் நடைபெறும் 2016 ஆம் ஆண்டிற்கான இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்து சமுத்திர வலைய நாடுகளின் பங்குபற்றுதலுடன் இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் தலைமை உரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வீரவங்சவின் சகோதரர் கைது, பீ.பி.ஜயசுந்தர நிதி குற்ற விசாரணைப் பிரிவில்- 

vimalபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மூத்த சகோதரரான சரத் வீரவங்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்த அவர் இன்றுகாலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். இதனையடுத்து சரத் வீரவங்சவைக் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் வாகனங்கள் விடயத்தில் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்றுகாலை ஆஜராகியிருந்தார். நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். 

பான் கீ மூனின் கவனத்தை ஈர்ப்பதற்கு யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்-

sivajilingamஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூனின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகம் நாளை யாழ்.மாவட்டத்திற்கு வருகைதர இருக்கும் நிலையில், யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை மற்றும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், நாளை நண்பகல் 12 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். இது ஐ.நா செயலாளருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு நீதி வழங்குங்கள் என அவரை எதிர்த்துக் கேட்பது போன்று இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார். இதேவேளை பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நாளை யாழ். பலாலி வீதியில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பு தொடர்பான இன்றைய வடமாகாணசபை தீர்மானம்-

pungudu-001aabbccபுங்குடுதீவு ஊரதீவுப் பகுதியிலுள்ள “திருநாவுக்கரசு வித்தியாசாலை”யானது மிகவும் இடிந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக ஊரதீவு மக்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களைத் தொடர்ந்து, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்கள், வடமாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரட்ணம் அவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, “புங்குடுதீவின் ஊரதீவு பகுதியில் அமைந்துள்ள மேற்படி திருநாவுக்கரசு முன்பள்ளியின் நிலைமைகள் தொடர்பிலும், அப்பகுதியிலுள்ள அதாவது கேரதீவு மற்றும் ஊரதீவு பகுதியிலுள்ள சிறுவர்கள் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் நீண்டதூரம், நடந்துசென்று மடத்துவெளி கமலாம்பிகை பாடசாலையில் கல்விகற்று வருவதனால் அவர்கள் சோர்வடைந்து படிப்பில் அதீத கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருப்பது உள்ளிட்ட பல விடயங்களையும் சுட்டிக்காட்டி” உரையாடியிருந்தார். Read more