Header image alt text

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் சந்திப்பு-

dsfdfdfdதமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்கீ மூனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் 2.30அளவில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், எஸ்.யோகேஸ்வரன், சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இன்றைக்கு மக்கள் நேரடியாக முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளான காணிப்பிரச்சினை, புத்த கோயில்கள் அமைப்பு, சிறைக்கைதிகளின் விடுதலை, காணாமற்போனோர் விடயம் ஆகியவை சம்பந்தமாக அரசாங்கம் கடந்த காலங்களில் பல உறுதிமொழிகளை வழங்கிய போதிலும், இதுவரையில் அவற்றில் எதையுமே செய்யவில்லை என்றும், எனவே இவ்விடயத்தினை தாங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும், அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றும், ஒரு சரியான அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் எங்களுடைய பகுதிகளில் அமைதியைப் பேணமுடியாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டினார். Read more

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 31வது நினைவுதினம் அனுஸ்டிப்பு-(படங்கள் இணைப்பு)-

sfdfdf (9)இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2016) காலை 7மணியளவில் திரு. திருஞானசம்பந்தர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. 31வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், வட மாகாண எதிர்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் க.சிவநேசன், பா.கஜதீபன், வலிமேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பெருமளவு பொதுமக்களும் கலந்து சிற்ப்பித்திருந்தனர். Read more

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களால் இடைக்காடு புதிய கரப்பந்தாட்ட மைதானம் திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)-

IMG_4601இடைக்காடு நம்பிக்கை நிதியத்தினால் யாழ். வடமராட்சி இடைக்காடு ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்காக உருவாக்கப்பட்ட புதிய கரப்பந்தாட்ட மைதானம் 30.08.2016 செவ்வாய்க்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு புதிய கரப்பந்தாட்ட மைதானத்தினை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. ஜயசிங்க, கோட்டக்கல்வி அதிகாரி திரு. கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இடைக்காட்டு நம்பிக்கை நிதியத்தின் தலைவர் அரசகேசரி(அதிபர்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். Read more

ஐ.நா பொதுச்செயலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், வடக்கு முதல்வர் சந்திப்பு-

ban ki moonஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று பகல் யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஐ.நா பொதுச்செயலர் முதலில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்தார். பின்னர் யாழ் பொதுநூலகத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு பிரதிநிதிகளையும், வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனையும் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பையடுத்து ஐ.நா செயலாளர் நாயகம் வலிகாமம் முகாமிற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார். இதேவேளை பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருமளவிலான மக்கள் யாழ். பொதுநூலகத்தை சூழவுள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருந்தது. காணாமற் போனோரின் உறவினர்கள், வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளோர் உள்ளிட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். காணாமற் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும் வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டி உட்பட்ட காணிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் சபாநாயகர் சந்திப்பு-

sfdfdஇலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலரை இன்றுகாலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று காலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் பாராளுமன்ற அவைத் தலைவர் லக்ஷமன் கிரியெல்ல, அரசியல் கட்சிகள், பாராளுமன்ற பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பாராளுமன்ற அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்து அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா, ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். சமீபத்திய காலத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலங்கள், பாராளுமன்றத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழு போன்றன தொடர்பில் இலங்கை குழுவினர் எடுத்துக் கூறியுள்ளனர். குறுகிய காலத்திற்குள் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள வேலைத் திட்டங்களை செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார். இதேவேளை ஐ.நா பொதுச்செயலர் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தார்.

இராணுவம் குறைக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்படவேண்டும்-ஐ.நா பொதுச்செயலர்-

ban ki moonவடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு நிலையான சமாதானம் தொடர்பில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் இன, மத, அரசியல் கருத்துகள், உட்பட்ட வேறுபாடுகளைக் களைந்து இன நல்லிணக்கத்தையும், மனித உரிமையின் மதிப்பினையும் ஏற்படுத்துவதற்கு இலங்கையர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது. யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்கள் அவர்களின் சொந்த நிலங்களுக்குச் செல்ல வேண்டும். மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் குடிகொண்டுள்ள இராணுவம் குறைக்கப்பட்டு மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும். இத்தகைய செயற்பாடுகளே மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியேழுப்பும் என ஐ.நா செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.

உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக அதேயிடத்தில் புதிய புத்தர் சிலை-

sdsssddவவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் வைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், அனுராதபுரத்தில் புதிய புத்தர் சிலையொன்றைப் பெற்று அதனை எடுத்துச்சென்று அங்கு பிரதிஸ்டை செய்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் தெரிவித்துள்ளார். இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பினரே கனகராயன்குளம் புத்தர் சிலையை உடைத்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பின் தலைவர் என்.அருண்காந்த் தெரிவித்துள்ளார். உடைக்கப்பட்ட புத்தர் சிலையை மீள நிறுவுவதற்கோ அல்லது இந்து பௌத்த மதங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கோ முயற்சித்தால் தனக்கு துப்பாக்கிச் சூடு விழும் என்று அந்த நபர் அச்சுறுத்தல் விடுத்ததாக அருண்காந்த் கூறியுள்ளார். Read more